பாலாவுக்கு பண்ணது போல வெற்றிமாறனுக்கும் பண்ணப் போறாரா சூர்யா?.. வாடிவாசலில் அந்த நடிகர் செட்டாவாரா?
சென்னை: வணங்கான் படத்தை அறிவித்து விட்டு அந்த படத்தை தயாரிக்கவும் முன் வந்த சூர்யா சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்தமாக அந்த படத்தில் இருந்து விலகியது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியது. ஆனால், பாலாவிடம் உட்கார்ந்து பேசி பெரிய பிரச்சனையாக்க விடாமல் சமாதானமான முறையிலேயே அந்த படத்தில் இருந்து நைஸாக கழண்டுக் கொண்டார்.
இந்நிலையில், வெற்றிமாறன் உடன் அதே போல அமர்ந்து பேசி வாடிவாசல் படத்தில் இருந்தும் விடைபெறும் முடிவில் சூர்யா இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட்டில் ஆர்வம்: அட்லீ பாலிவுட்டுக்கு சென்று ஒரே படத்திலேயே பெரிய இயக்குநராக மாறிவிட்டார். விஜய்சேதுபதி, நயன்தாரா அனிருத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாமும் அதே போல இந்திக்கு சென்றால் மிகப்பெரிய வசூலை அள்ளலாம் என்கிற முடிவில் சூர்யா கர்ணன் படத்தில் கமிட் ஆகி உள்ளார் என்றும் கங்குவா படத்தை விட கர்ணன் படத்துக்கு பல மாதங்கள் சூட்டிங் நடத்த தேவைப்படும் நிலை உள்ளதால் வாடிவாசல் படத்திற்கு எண்ட் கார்டு போடாமல் அதிலிருந்து ஒதுங்கி கொள்ளும் முடிவுக்கே சூர்யா வந்திருப்பதாக கூறுகின்றனர்.
வாடிவாசலில் இருந்து விலகப் போறாரா?: சூர்யா தான் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என தயாரிப்பு தரப்பு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவால் ஏற்படும் கால தாமதத்தை பார்த்து யாரை வைத்தாவது அந்த படம் உருவானால் போதும் என்கிற நிலைக்கே தயாரிப்பாளர் தாணு வந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தனுஷ் நடிக்கிறாரா?: வாடிவாசல் படத்தில் இருந்து பேச்சுவார்த்தை மூலமாக சூர்யா விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக தனுஷ் அந்த படத்தில் நடிக்கப் போவதாகவும் ஒரு தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. காளையை அடக்கும் காட்சிக்கு தனுஷ் செட்டாவாரா? என்கிற கேலியும் கிண்டலும் வேறு ஒரு பக்கம் கிளம்பி இருக்கிறது.
அசுரனிலும் அப்படித்தான்: வயதுக்கு வந்த மகனை பெற்ற தந்தை சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷ் எப்படி செட் ஆவார். அவரே ஸ்கூல் பாய் மாதிரி தானே இருக்கிறார். டிஜே அருணாச்சலத்துக்கு தம்பி ரோலில் வேண்டுமானால் தனுஷ் நடிக்கலாம் என கலாய்த்தார்கள். ஆனால், ராயன் படத்திற்காக தனுஷ் தனது உடம்பை வேறுமாதிரி மாற்றி உள்ள நிலையில், வாடிவாசல் படத்தையும் தனுஷை வைத்தே முடித்து விடலாமா என்கிற யோசனையிலும் வெற்றிமாறன் இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











