விஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்!

விஐபி படத்தின் கதையை திருடிய மராத்தி பட தயாரிப்பாளருக்கு எதிரான வழங்கில் தனுஷ் வெற்றி!

சென்னை: விஐபி படத்தை உரிய அனுமதி பெறாமல் மராத்தியில் தயாரித்த தயாரிப்பாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தனுஷுக்கு சாதகமான முடிவு வந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சக்க போடு போட்ட படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் பேசிய விஷயமே அடுத்தவனை பிழைக்க விடாமல் உழைப்பை சுரண்டி வாழாதீர்கள் என்பதுதான். இப்படி கருத்து சொன்ன படத்தின் கதையை காப்பி அடித்தால் தனுஷ் விடுவாரா? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் ஜெயித்திருக்கிறார்.

Dhanush wins in illegal remake case!

மும்பையைச் சேர்ந்த மராத்தி தயாரிப்பாளர் ப்ரணிதா பவார், சக்ரபோர்த்தி இந்த படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். படத்தில் நடிகர்களை மட்டும் மாற்றிவிட்டு, "வாட்ட கருவாடு...", " ஊதுங்கடா சங்கு"... என்ற பாடல்களை கூட மாற்றாமல் வி.ஐ.பி கதையை அப்படியே ரீமேக் பண்ணியிருக்கிறார்கள்.

"மஜ்கா நாவ் சிவாஜி" என்கிற இந்த படம் அச்சு அசல் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் காப்பி என்று தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த மராத்தி படம் வேலையில்லா பட்டதாரியை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி, படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்து, ரீமேக் உரிமத்திற்கான தொகையும் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X