»   »  வளர்த்த கெடா மாரில் பாய்ந்தாலும் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ்

வளர்த்த கெடா மாரில் பாய்ந்தாலும் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Dhanush wishes birthday boy Sivakarthikeyan

சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு பின்னர் பிரச்சனை காரணமாக பிரிந்தார் தனுஷ். இது குறித்து சிவாவும், தனுஷும் பொது இடங்களில் பேசுவது இல்லை.

வளர்த்த கெடா மாரில் பாய்ந்தாலும் தனுஷ் சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடிக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் அவரையும் வாழ்த்தியுள்ளார் தனுஷ்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என தெரிவித்துள்ளார்.

English summary
Dhanush has wished actor Sivakarthikeyan and Television anchor DhivyaDharshini a happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil