பாவம்யா தனுஷ் ரசிகர்கள்: இருந்தாலும் வாழ்த்துக்கள்
சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் தனுஷ்.
சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.
புதுப்படங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளது அந்த தயாரிப்பு நிறுவனம்.
சத்யஜோதி
தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ். ஒரு படத்தை துரை செந்தில் குமார் இயக்க, விவேக், மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். அடுத்த படத்தை முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் ராம் குமார் இயக்குகிறார் என்று சத்யஜோதி பிலிம்ஸ் ட்வீட் செய்துள்ளது.
தனுஷ்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பதில் தனுஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
தல ரசிகர்கள்
சத்யஜோதி பிலிம்ஸின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அப்டேட்
சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்கும் படங்கள் குறித்த விபரங்களை அதாவது அப்டேட் கொடுப்பதில் ஆர்வம் காட்டாது. விஸ்வாசம் பட அப்டேட் கேட்டு கெஞ்சிக் கதறினார்கள் தல ரசிகர்கள். தற்போது தனுஷ் ரசிகர்களுக்கும் அதே நிலை ஏற்படப் போகிறது. அவர்களாக அப்டேட் கொடுத்தால் தான் உண்டு.


Click it and Unblock the Notifications











