ஹீரோ .. ஹீரோ ..

By Staff

தனுஷின் சம்பளம் ரூ. 3 கோடியாக உயர்ந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

ராகாவா படத்தில் நடிக்க மறுத்து தனுஷ் தரப்பு செய்த சொதப்பல் குறித்து இயக்குனர் சிபி சக்கரவர்த்திநிருபர்களிடம் கூறுகையில்,

காதல் கொண்டேன் படத்துக்கு முன்பே ராகவா படத்தை எடுக்கத் திட்டமிட்டு ரூ. 1 லட்சம் அட்வான்ஸ்கொடுத்தோம். சம்பளமாக ரூ. 40 லட்சம் பேசினோம். காதல் கொண்டேன் ரிலீஸான இரண்வாடது நாளில்கால்ஷீட் கேட்க தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவை சந்தித்தோம்.

அப்போது ரூ. 40 சம்பளம் எல்லாம் சரிப்பட்டு வராது, இப்போது தனுஷின் ரேஞ்சே வேறு என்றார். இதையடுத்துரூ. 90 லட்சம் தர ஒப்புக் கொண்டோம். அதையடுத்து மேலும் ரூ. 10 லட்சத்தை தனுஷிடம் தந்தோம்.

இதையடுத்து திருடா திருடி, ட்ரீம்ஸ் படங்களை முடித்துவிட்டு எங்களுக்கு கால்ஷீட் தருவதாக கஸ்தூரிராஜாசொன்னார். மேலும் தனஷ் பிறந்தநாளுக்கு பத்திரிக்கைகளில் விளம்பரம் தரவும் சொன்னார். இதையடுத்துபதினெட்டு வயதுப் புயலே என்று விளம்பரம் தந்தோம். அதற்கும் பல லட்சம் செலவழித்தோம்.

அதன் பிறகு ட்ரீம்ஸ் படப்பிடிப்பில் தனுஷை சந்தித்து கதை சொன்னோம். கதை நன்றாக இருப்பதாகவும் வரும்செப்டம்பர் 10ம் தேதி பூஜை போடலாம் என்றார். இதைத் தொடர்ந்து படத்துக்கு ராகவா என்று பெயர் வைத்துபூஜையும் போடப்பட்டது.

டிசம்பர் 1ம் தேதி முதல் கால்ஷீட் தருவதாகவும் தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும்தனுஷும் கஸ்தூரிராஜவும் சொன்னார்கள். அதையடுத்து மேலும் ரூ. 5 லட்சம் கேட்டார்கள். அதையும் தந்தோம்.

கிட்டத்தட்ட ரூ. 16 லட்சத்தை அட்வான்ஸாக மூன்று தவணைகளில் வாங்கிய தனுசும், கஸ்தூரி ராஜாவும் திடீரெனஎங்களைத் தவிர்க்க ஆரம்பித்தனர். இருவரையும் போனில் பிடிக்க முயன்றாலும் தவிர்த்தனர். இதையடுத்து பாலுமகேந்திரா, ஏவி.எம் ஆகியோரின் படங்களில் தனுஷ் நடிக்கப் போவதாக எங்களுக்கு தகவல் வந்தது.

நமக்கு இன்னும் கால்ஷீட் தரவில்லையே என்று கவலையுடன், கஸ்தூரிராஜாவை போனில் பிடிக்க எவ்வளவோமுயன்றும், நேரில் பார்க்க அனுமதிக்கக் கோரி ஆள் அனுப்பியும் பலன் ஏற்படவில்லை. தனுஷோ மலேசியாபோய்விட்டார்.

இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தோம். உடனே நாங்கள் கொடுத்த அட்வான்சில் ரூ. 15லட்சத்தை திருப்பி அனுப்பி கஸ்தூரிராஜா, இனி உங்கள் படத்தில் தனுஷ் நடிக்க மாட்டான் என்று பதில்சொன்னார்.

எங்களுக்குத் தேவை தனஷின் கால்ஷீட் தான், பணம் அல்ல என்றோம். ஒப்புக் கொண்டபடி ரூ. 90 லட்சத்துக்குராகாவா படத்டை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேஸ் போட்டோம்.

காதல் கொண்டேன், திருடா திருடி ஆகிய படங்களின் வெற்றி பெற்ற பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டதனுஷ், இப்போது சம்பளமாக ரூ. 3 கோடி வரை எதிர்பார்க்கிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X