»   »  தனுஷை சீண்டும் சிம்பு! விஜய்க்கும், அஜீத்திற்கும் இடையே கொஞ்ச நாளாக நடந்து வந்த வசனப் போர், இப்போது சிம்பு-தனுஷுக்கிடையேதீவிரமாகியுள்ளது. இளைய தளபதி விஜய், அடிக்கடி தல அஜீத்தை தனது படங்களில் வசனங்கள் மூலம் சீண்டிப் பார்ப்பது வழக்கம். ஆரம்பத்தில்இது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் போகப் போக பெரும் பிரச்சிசைனயாக இது மாறியது.இந்த வசனப் போரில் பெரும்பாலும் விஜய்தான் அதிகம் டாமினேட் செய்வார். இதனால் ரொம்பவே கடுப்பாகிப் போயிருந்தார்அஜீத்.இரண்டு பேருக்கும் இடையே வலுத்து வந்த அக்கப்போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்தன. அவற்றின்விளைவாக தற்போது சீண்டுதலை குறைத்துக் கொண்டு விட்டார் விஜய். இதனால் அஜீத் நிம்மதியடைந்துள்ளார். இவர்களே அமைதியாகி விட்ட நிலையில் விஜய் பாணியைப் பிடித்துக் கொண்டு விட்டார் சிம்பு. தளபதிக்கு எப்படி தலயோ,அதுபோல சிம்புவுக்கு தனுஷ். ரொம்ப குளோஸ் நண்பர்களாக இருந்த இரண்டு பேரும் திடீரென முறைத்துக் கொண்டார்கள்.அப்போது தனுஷ் கை திரையுலகில் ஓங்கியிருந்தது. தொடர்ந்து மூன்று சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த தெம்பில் இருந்தார்தனுஷ்.முறைப்பு அதிகமாகிய நேரத்தில் தனுஷுக்கு மார்க்கெட் போனது. மன்மதன் மூலம் மேலே வந்தார் சிம்பு. அந்த சமயம் பார்த்துதிடீரென ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் கல்யாணம் செய்து கொண்டார். சிம்புவின் மார்க்கெட் ஏறுமுகத்தில்இருந்தபோது, தனுஷின் செல்வாக்கு பொல பொலவென தகர்ந்து தரைமட்டமானது.இப்போது சுத்தமாக மார்க்கெட் இழந்து விட்ட தனுஷ், அது ஒரு கனாக்காலம் படத்தைத்தான் நம்பியுள்ளார். இப்படம் மூலம்இழந்த மார்க்கெட்டைப் பிடிப்பது, அதுவரை யாருடனும் பேசாமல் இருப்பது என புதிய பாலிசியை கடைப்பிடித்து வருகிறார்தனுஷ். ஆனால் சிம்பு விட மாட்டேன் என்கிறார். மன்மதன் படத்தில் தனுஷுக்கு எதிராக வசனம் வைத்தார் சிம்பு. யாருஜெயிக்கிறாங்கறது முக்கியமல்ல, ஜெயித்த பிறகும் யாரு நிலையா, உயரத்துல இருக்கிறாங்கறதுதான் முக்கியம் என பஞ்ச் டயலாக்வைத்தார் சிம்பு. இது அப்படியே தனுஷுக்காக வைக்கப்பட்ட வசனம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.அத்தோடு விட்டாரா? இப்போது தனது கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படத்திலும் தனுஷை வம்புக்குஇழுத்துள்ளார் சிம்பு. மறைமுகமாக ரஜினியையும் இழுத்துள்ளார்.வல்லவனில் இப்படி ஒரு வசனம் வருகிறதாம்: அம்பானி மகளைக் கல்யாணம் பண்றது ஒன்னும் பெரிய விஷயமேயில்லை,ஆனால் அந்தளவுக்கு நமக்குத் தகுதி இருக்கான்னு யோசிக்கனும் என்று வருகிறது அந்த வசனம். அம்பானி யாருன்னு விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அப்படியே ரஜினியையும், தனுஷையும் தாக்கித்தான் இந்த வசனத்தைசிம்பு வைத்துள்ளார் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட பட்டென்று சொல்லி விடும்.இந்த வசனம் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என கோலிவுட்டில் புகைகிறது. மார்க்கெட்டல்லாகிக் கிடக்கும் இந்த நேரத்தில் தனுஷை சீண்டும் விதமாகவே இப்படிப்பட்ட வசன்ததை சிம்பு எழுதியுள்ளார் என்கிறார்கள். ஆனால் வழக்கம் போல எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதை விரும்பாத தனுஷ், சிம்புவின் இந்த சீண்டலுக்கு பதில் தரப்போவதில்லை என்றே தோன்றுகிறது. தனுஷுக்கு எதிரான சிம்புவின் இந்தப் போக்கு எங்கே போய் கொண்டு விடும் என்பதுதெரியவில்லை.

தனுஷை சீண்டும் சிம்பு! விஜய்க்கும், அஜீத்திற்கும் இடையே கொஞ்ச நாளாக நடந்து வந்த வசனப் போர், இப்போது சிம்பு-தனுஷுக்கிடையேதீவிரமாகியுள்ளது. இளைய தளபதி விஜய், அடிக்கடி தல அஜீத்தை தனது படங்களில் வசனங்கள் மூலம் சீண்டிப் பார்ப்பது வழக்கம். ஆரம்பத்தில்இது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் போகப் போக பெரும் பிரச்சிசைனயாக இது மாறியது.இந்த வசனப் போரில் பெரும்பாலும் விஜய்தான் அதிகம் டாமினேட் செய்வார். இதனால் ரொம்பவே கடுப்பாகிப் போயிருந்தார்அஜீத்.இரண்டு பேருக்கும் இடையே வலுத்து வந்த அக்கப்போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்தன. அவற்றின்விளைவாக தற்போது சீண்டுதலை குறைத்துக் கொண்டு விட்டார் விஜய். இதனால் அஜீத் நிம்மதியடைந்துள்ளார். இவர்களே அமைதியாகி விட்ட நிலையில் விஜய் பாணியைப் பிடித்துக் கொண்டு விட்டார் சிம்பு. தளபதிக்கு எப்படி தலயோ,அதுபோல சிம்புவுக்கு தனுஷ். ரொம்ப குளோஸ் நண்பர்களாக இருந்த இரண்டு பேரும் திடீரென முறைத்துக் கொண்டார்கள்.அப்போது தனுஷ் கை திரையுலகில் ஓங்கியிருந்தது. தொடர்ந்து மூன்று சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த தெம்பில் இருந்தார்தனுஷ்.முறைப்பு அதிகமாகிய நேரத்தில் தனுஷுக்கு மார்க்கெட் போனது. மன்மதன் மூலம் மேலே வந்தார் சிம்பு. அந்த சமயம் பார்த்துதிடீரென ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் கல்யாணம் செய்து கொண்டார். சிம்புவின் மார்க்கெட் ஏறுமுகத்தில்இருந்தபோது, தனுஷின் செல்வாக்கு பொல பொலவென தகர்ந்து தரைமட்டமானது.இப்போது சுத்தமாக மார்க்கெட் இழந்து விட்ட தனுஷ், அது ஒரு கனாக்காலம் படத்தைத்தான் நம்பியுள்ளார். இப்படம் மூலம்இழந்த மார்க்கெட்டைப் பிடிப்பது, அதுவரை யாருடனும் பேசாமல் இருப்பது என புதிய பாலிசியை கடைப்பிடித்து வருகிறார்தனுஷ். ஆனால் சிம்பு விட மாட்டேன் என்கிறார். மன்மதன் படத்தில் தனுஷுக்கு எதிராக வசனம் வைத்தார் சிம்பு. யாருஜெயிக்கிறாங்கறது முக்கியமல்ல, ஜெயித்த பிறகும் யாரு நிலையா, உயரத்துல இருக்கிறாங்கறதுதான் முக்கியம் என பஞ்ச் டயலாக்வைத்தார் சிம்பு. இது அப்படியே தனுஷுக்காக வைக்கப்பட்ட வசனம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.அத்தோடு விட்டாரா? இப்போது தனது கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படத்திலும் தனுஷை வம்புக்குஇழுத்துள்ளார் சிம்பு. மறைமுகமாக ரஜினியையும் இழுத்துள்ளார்.வல்லவனில் இப்படி ஒரு வசனம் வருகிறதாம்: அம்பானி மகளைக் கல்யாணம் பண்றது ஒன்னும் பெரிய விஷயமேயில்லை,ஆனால் அந்தளவுக்கு நமக்குத் தகுதி இருக்கான்னு யோசிக்கனும் என்று வருகிறது அந்த வசனம். அம்பானி யாருன்னு விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அப்படியே ரஜினியையும், தனுஷையும் தாக்கித்தான் இந்த வசனத்தைசிம்பு வைத்துள்ளார் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட பட்டென்று சொல்லி விடும்.இந்த வசனம் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என கோலிவுட்டில் புகைகிறது. மார்க்கெட்டல்லாகிக் கிடக்கும் இந்த நேரத்தில் தனுஷை சீண்டும் விதமாகவே இப்படிப்பட்ட வசன்ததை சிம்பு எழுதியுள்ளார் என்கிறார்கள். ஆனால் வழக்கம் போல எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதை விரும்பாத தனுஷ், சிம்புவின் இந்த சீண்டலுக்கு பதில் தரப்போவதில்லை என்றே தோன்றுகிறது. தனுஷுக்கு எதிரான சிம்புவின் இந்தப் போக்கு எங்கே போய் கொண்டு விடும் என்பதுதெரியவில்லை.

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்க்கும், அஜீத்திற்கும் இடையே கொஞ்ச நாளாக நடந்து வந்த வசனப் போர், இப்போது சிம்பு-தனுஷுக்கிடையேதீவிரமாகியுள்ளது.

இளைய தளபதி விஜய், அடிக்கடி தல அஜீத்தை தனது படங்களில் வசனங்கள் மூலம் சீண்டிப் பார்ப்பது வழக்கம். ஆரம்பத்தில்இது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் போகப் போக பெரும் பிரச்சிசைனயாக இது மாறியது.

இந்த வசனப் போரில் பெரும்பாலும் விஜய்தான் அதிகம் டாமினேட் செய்வார். இதனால் ரொம்பவே கடுப்பாகிப் போயிருந்தார்அஜீத்.

இரண்டு பேருக்கும் இடையே வலுத்து வந்த அக்கப்போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்தன. அவற்றின்விளைவாக தற்போது சீண்டுதலை குறைத்துக் கொண்டு விட்டார் விஜய். இதனால் அஜீத் நிம்மதியடைந்துள்ளார்.


இவர்களே அமைதியாகி விட்ட நிலையில் விஜய் பாணியைப் பிடித்துக் கொண்டு விட்டார் சிம்பு. தளபதிக்கு எப்படி தலயோ,அதுபோல சிம்புவுக்கு தனுஷ். ரொம்ப குளோஸ் நண்பர்களாக இருந்த இரண்டு பேரும் திடீரென முறைத்துக் கொண்டார்கள்.அப்போது தனுஷ் கை திரையுலகில் ஓங்கியிருந்தது. தொடர்ந்து மூன்று சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த தெம்பில் இருந்தார்தனுஷ்.

முறைப்பு அதிகமாகிய நேரத்தில் தனுஷுக்கு மார்க்கெட் போனது. மன்மதன் மூலம் மேலே வந்தார் சிம்பு. அந்த சமயம் பார்த்துதிடீரென ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் கல்யாணம் செய்து கொண்டார். சிம்புவின் மார்க்கெட் ஏறுமுகத்தில்இருந்தபோது, தனுஷின் செல்வாக்கு பொல பொலவென தகர்ந்து தரைமட்டமானது.

இப்போது சுத்தமாக மார்க்கெட் இழந்து விட்ட தனுஷ், அது ஒரு கனாக்காலம் படத்தைத்தான் நம்பியுள்ளார். இப்படம் மூலம்இழந்த மார்க்கெட்டைப் பிடிப்பது, அதுவரை யாருடனும் பேசாமல் இருப்பது என புதிய பாலிசியை கடைப்பிடித்து வருகிறார்தனுஷ்.


ஆனால் சிம்பு விட மாட்டேன் என்கிறார். மன்மதன் படத்தில் தனுஷுக்கு எதிராக வசனம் வைத்தார் சிம்பு. யாருஜெயிக்கிறாங்கறது முக்கியமல்ல, ஜெயித்த பிறகும் யாரு நிலையா, உயரத்துல இருக்கிறாங்கறதுதான் முக்கியம் என பஞ்ச் டயலாக்வைத்தார் சிம்பு. இது அப்படியே தனுஷுக்காக வைக்கப்பட்ட வசனம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்தோடு விட்டாரா? இப்போது தனது கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படத்திலும் தனுஷை வம்புக்குஇழுத்துள்ளார் சிம்பு. மறைமுகமாக ரஜினியையும் இழுத்துள்ளார்.

வல்லவனில் இப்படி ஒரு வசனம் வருகிறதாம்: அம்பானி மகளைக் கல்யாணம் பண்றது ஒன்னும் பெரிய விஷயமேயில்லை,ஆனால் அந்தளவுக்கு நமக்குத் தகுதி இருக்கான்னு யோசிக்கனும் என்று வருகிறது அந்த வசனம்.


அம்பானி யாருன்னு விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அப்படியே ரஜினியையும், தனுஷையும் தாக்கித்தான் இந்த வசனத்தைசிம்பு வைத்துள்ளார் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட பட்டென்று சொல்லி விடும்.

இந்த வசனம் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என கோலிவுட்டில் புகைகிறது. மார்க்கெட்டல்லாகிக் கிடக்கும் இந்த நேரத்தில் தனுஷை சீண்டும் விதமாகவே இப்படிப்பட்ட வசன்ததை சிம்பு எழுதியுள்ளார் என்கிறார்கள்.

ஆனால் வழக்கம் போல எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதை விரும்பாத தனுஷ், சிம்புவின் இந்த சீண்டலுக்கு பதில் தரப்போவதில்லை என்றே தோன்றுகிறது. தனுஷுக்கு எதிரான சிம்புவின் இந்தப் போக்கு எங்கே போய் கொண்டு விடும் என்பதுதெரியவில்லை.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil