தனுஷ் ஙண் வெற்றிகொண்டான் நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் கூறினார்.பட்டுக்கோட்டையில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான், நடிகர் தனுசை மிகக் கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்கபோனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப்பிடித்து ஆடினார்கள். எனக்குதிகைப்பாய் இருந்தது. அந்தப் பெண், தாயேண்டா என்று கத்த நடிகரோ மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த நடிகையை ஏதோதோ செய்கிறார். ஒருஅறைக்குள் செய்ய தயங்கும் கூத்துக்களை அவர் திரையில் செய்கிறார்.நடிகர் யார் என்று கேட்டேன். சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்றார்கள். இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கஇந்த ஒரு நடிகரே போதும். ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் மீது ரொம்ப பாசம் வைத்துள்ளார். அவர் மருமகனான தனுஷ்இப்படியெல்லாம் நடிக்கலாமா? தனுஷ் நடித்த எல்லாமே கருமப்படம்.சமீபத்தில் வெளியான அது ஒரு கனாக் காலம் படத்தில் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை கசமுசா செய்கிறார். என்ன கருமம்பாருங்கள். வயசு பிள்ளைகளுக்கு தனுஷ் கற்றுக் கொடுப்பதை பார்த்தீர்களா? என்றார்.வெற்றி கொண்டானின் இந்தப் பேச்சுக்கு ரஜினி, தனுஷ் ரசிகர் மன்றங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தஞ்சாவூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ஹூமாயூன் கூறுகையில், நாகரீகம் கெட்டுப் போய் வெற்றிகொண்டான் பேசி உள்ளார் என்றார்.இது குறித்து தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா கூறியதாவது:தனுஷ் ஒரு நடிகர். டைரக்டர் சொல்லி கொடுப்பதை செய்கிறார். தனுஷ் விருப்பப்பட்டு ஆபாசமாக நடிப்பது போல் வெற்றிகொண்டான் வம்புக்கு இழுத்துள்ளார். ஆபாசம் என்று நினைத்திருந்தால் தனுஷ் படங்களை மக்கள் ரசித்திருப்பார்களா?தனுஷ் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது. அவற்றை வெற்றி கொண்டான் பார்த்திருக்கமாட்டார் என்றார்.

By Staff

நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் கூறினார்.

பட்டுக்கோட்டையில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான், நடிகர் தனுசை மிகக் கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது:

சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்கபோனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப்பிடித்து ஆடினார்கள். எனக்குதிகைப்பாய் இருந்தது.


அந்தப் பெண், தாயேண்டா என்று கத்த நடிகரோ மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த நடிகையை ஏதோதோ செய்கிறார். ஒருஅறைக்குள் செய்ய தயங்கும் கூத்துக்களை அவர் திரையில் செய்கிறார்.

நடிகர் யார் என்று கேட்டேன். சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்றார்கள். இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கஇந்த ஒரு நடிகரே போதும். ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் மீது ரொம்ப பாசம் வைத்துள்ளார். அவர் மருமகனான தனுஷ்இப்படியெல்லாம் நடிக்கலாமா? தனுஷ் நடித்த எல்லாமே கருமப்படம்.

சமீபத்தில் வெளியான அது ஒரு கனாக் காலம் படத்தில் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை கசமுசா செய்கிறார். என்ன கருமம்பாருங்கள். வயசு பிள்ளைகளுக்கு தனுஷ் கற்றுக் கொடுப்பதை பார்த்தீர்களா? என்றார்.

வெற்றி கொண்டானின் இந்தப் பேச்சுக்கு ரஜினி, தனுஷ் ரசிகர் மன்றங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


தஞ்சாவூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ஹூமாயூன் கூறுகையில், நாகரீகம் கெட்டுப் போய் வெற்றிகொண்டான் பேசி உள்ளார் என்றார்.

இது குறித்து தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா கூறியதாவது:

தனுஷ் ஒரு நடிகர். டைரக்டர் சொல்லி கொடுப்பதை செய்கிறார். தனுஷ் விருப்பப்பட்டு ஆபாசமாக நடிப்பது போல் வெற்றிகொண்டான் வம்புக்கு இழுத்துள்ளார். ஆபாசம் என்று நினைத்திருந்தால் தனுஷ் படங்களை மக்கள் ரசித்திருப்பார்களா?

தனுஷ் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது. அவற்றை வெற்றி கொண்டான் பார்த்திருக்கமாட்டார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X