சிவகார்த்திகேயனை பழிவாங்குவாரா தனுஷ்?.. விடாமல் துரத்தும் எஸ்கே?..என்னதான் பிளான்?..ரசிகர்கள் கேள்வி
சென்னை: தனுஷால் சினிமாவுக்குள் வந்தவர் சிவகார்த்திகேயன். அவரை தனுஷ் தனது உடன் பிறவாத சகோதரர் என்றே சொல்லிவந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் பனிப்போர் ஆரம்பித்திருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயேனின் பேச்சு அந்த தகவல்களுக்கு வலுவை கொடுத்தது. இந்தச் சூழலில் இரண்டு பேர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 3. அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய ரோலை செய்திருந்தார். இதற்கிடையே மெரினா படத்தில் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிவிட்டார். 3 படத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் கமிட்டான சிவாவை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரின் கீழ் ஹீரோவாக களமிறக்கினார். துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்த எதிர்நீச்சல் திரைப்படம் எஸ்கேவுக்கு நல்லதொரு உயரத்துக்கான முதல் படியாக இருந்தது.

முன்னணி ஹீரோ: தொடர்ந்து தனது திறமையை வளர்த்து மிகப்பெரிய உயரத்தை இப்போது தொட்டிருக்கும் சிவா கடைசியாக அமரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 330 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. தற்போது அவரது நடிப்பில் மதராஸி, பராசக்தி என்ற இரண்டு படங்கள் உருவாகிவருகின்றன. இவற்றில் மதராஸியை ஏ.ஆர்.முருகதாஸும், பராசக்தியை சுதா கொங்கராவும் இயக்குகிறார்கள். இவர்கள் இரண்டு பேருமே இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷுடன் மோதல்?: இதற்கிடையே சிவகார்த்திகேயனை தனுஷ் தனது உடன் பிறவாத சகோதரர் என்றே அழைத்துவந்தார். இரண்டு பேருக்குமான உறவும், நட்பும் அவ்வளவு நெருக்கமாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்களுக்குள் மோதல் உருவாகிவிட்டதாக் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தகவல்கள் பரவிவருகின்றனர். சிவாவும் தான் தயாரித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியதை பார்த்த ரசிகர்கள்; மறைமுகமாக அவர் தனுஷைத்தான் தாக்குகிறார் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்தார்கள்.
போட்டியாக எஸ்கே: முக்கியமாக அயலான் திரைப்படத்தை தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு போட்டியாக களமிறக்கினார் சிவகார்த்திகேயன். யாரும் எதிர்பார்க்காத விதமாக தனுஷ் நடித்த படத்தைவிடவும் சிவா நடித்த படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. சினிமாவில் அறிமுகப்படுத்தியவரையே பந்தயம் அடித்துவிட்டாரே எஸ்கே என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவந்தார்கள். இந்நிலையில் இரண்டு பேர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மீண்டும் போட்டி?: அதாவது தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அன்றைய நாள்தான் அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. முதலில் அஜித்துடன் மோதி பார்த்துவிடலாம் என்று தனுஷ் திட்டமிட்டிருந்ததாகவும்; குட் பேட் அக்லியின் டீசரையும், அதற்கு கிடைத்த ரெஸ்பான்ஸையும் பார்த்துவிட்ட ரிலீஸை தள்ளி வைக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இட்லி கடை படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடலாமா என்ற யோசனையிலும் அவர் இருக்கிறாராம். அதேசமயம் அன்றைய நாள் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி படமும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ ஏற்கனவே கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் களமிறங்கி பந்தயம் அடித்தது. இந்த முறை ஒருவேளை இரண்டு படங்களும் ரிலீஸானால் சிவகார்த்திகேயனை தனுஷ் பழிவாங்கும் வகையில் இட்லி கடையை உருவாக்கியிருப்பாரா என்று கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











