பிணங்கள் மத்தியில்தான் நிம்மதி.. அப்படி நான் உணர்ந்ததே இல்லை.. தனுஷ் ஓபன் டாக்.. என்ன ஆச்சு?

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் குபேரா திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவிருக்கிறது. சேகர் கம்முல்லா இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கோலிவுட்டில் ஆரம்பித்த அவரது பயணம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு இப்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனி ஹீரோயினாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தனுஷ் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழில் பிஸி: ஹாலிவுட் சென்றாலும் தமிழில் அவர் டஜன் கணக்கில் படங்கள் வைத்திருக்கிறார். இப்போது குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர்; அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், போர் தொழில் இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தி ஒரு படம் என படு பிஸியாக இருக்கிறார்.

Dhanush s Kubera Audio Launch Speech Goes Trending In Social Media
Photo Credit:

தனுஷை சுற்றி பிரச்னை: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்றார். அதேபோல் அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் மோதல் போக்கு நிலவிவருகிறது. திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்னை இருக்க மறுப்பக்கம் அவரது சினிமா கரியரில் ஏகப்பட்ட வதந்திகளும் கிசுகிசுக்களும் பரவுவது வழக்கமாகவே இருக்கின்றன. இருப்பினும் தனுஷ் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தனது திரை பயணத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

குபேரா: அந்தவகையில் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து வாத்தி படத்தில் சூடு போட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட சூழலில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் முதன்முதலாக தனுஷ் நடித்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படமானது நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் பெரிய வரவேற்பையே பெற்றிருக்கிறது.

தனுஷின் பேச்சு: இந்நிலையில் குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "சேகர் கம்முல்லாவை நல்ல இயக்குநர் என்று நம்பி போனேன். ஆனால் அவரோ திருப்பதி அடிவாரத்தில் என்னை பிச்சை எடுக்க விட்டுவிட்டார். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஏற்கனவே இந்த அனுபவம் எனக்கு காசியில் கிடைத்தது.

பிணங்கள் மத்தியில் நிம்மதி: ராஞ்சனா படத்தின் ஷூட்டிங் காசியில் நடந்தது. ஹரிசந்திரா காட்டில் என்னை நிற்க வைத்துவிட்டு இயக்குநர் கங்கை நதியில் ஒரு படகில் கேமராவை எடுத்துக்கொண்டு போய்விடுவார். என்னை சுற்றி 15 பிணங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்த பிணங்களுக்கு மத்தியில்தான் எனக்கு நிம்மதியே கிடைத்தது. அது பெரிய அனுபவம். அப்போதுதான் இங்கு எல்லாம் மாயை என்பதை நான் உணர்ந்துகொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X