Kuberaa Box Office: கூரையை பிச்சுக்கிட்டு கொட்டலைனாலும்.. தனுஷுக்கு இது டாப் தான்.. குபேரா 10வது நாள் வசூல்!
ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியான குபேரா திரைப்படம் 2வது வாரமும் தொடர்ந்து சில கோடிகளை அள்ளி பாக்ஸ் ஆபீஸில் தாக்குப்பிடித்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா நடித்தாலே 500 கோடி, 1000 கோடி படமாகத்தான் இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், குபேரா திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை மட்டுமே இதுவரை ஈட்டியுள்ளது.
கடைசியாக தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் அதிகபட்சமாக தனுஷ் வாழ்நாளிலேயே 150 கோடி வசூலை தொட்ட படமாக மாறியது. இந்தியாவிலேயே அந்த படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

இந்நிலையில், ராயன் படத்தை அசால்ட்டாக குபேரா படம் மிஞ்சும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் படம் பெரிதாக ஓடாத நிலையில், தனுஷின் 2வது மிகப்பெரிய வசூல் சாதனை படமாகவே குபேரா மாறியிருக்கிறது. 2வது வாரத்தில் எந்தளவுக்கு தனுஷின் குபேரா வசூல் ஈட்டியது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..
குபேரா 10வது நாள் வசூல்: தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் அதிகபட்சமாக 160 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் ஏற்கனவே 100 கோடி வசூலை ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகபட்சமாக 4.5 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியாவில் குபேரா திரைப்படம் 90 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தெலுங்கு வெர்ஷன் மட்டுமே 60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
கண்ணப்பா ரிலீஸால் பாதிப்பு: விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த கண்ணப்பா திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தெலுங்கில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அந்த படத்தை வெளியிட்ட நிலையில், குபேரா படத்துக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்ட நிலையில், தான் தெலுங்கிலும் வசூல் குறைய காரணம் என்கின்றனர். உலகளவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 115 கோடி வரை குபேரா படத்துக்கு வசூல் வந்திருக்கும் என்கின்றனர்.
இட்லி கடை முந்துமா?: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை படம் தான் வெளியாகும் என தெரிகிறது. அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்துக்குள் அந்த படத்தை மொத்தமாக முடித்து விட்டு சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவார்களா? அல்லது டிசம்பருக்கு படம் தள்ளிப் போகுமா? உள்ளிட்ட கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் தனுஷின் குபேரா படம் எடுபடாமல் போன நிலையில், இட்லி கடை படமாவது ராயன் வசூலை பீட் பண்ணும் படமாக தனுஷுக்கு அமையுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். இட்லி கடை படத்தைத் தொடர்ந்து தனுஷ் கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications











