தனுஷ் அக்கா மகன் பவிஷின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?.. வெளியானது சூப்பரான அப்டேட்!
சென்னை: தனுஷின் இயக்கத்தில் உருவான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பவிஷ், தனது அடுத்த படமான 'லவ் ஓ லவ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார்.
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். க்ளீன் ஷேவ் லுக்கில் ஜென் ஸி லவ்வராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்தனர்.

முதல் படத்திலேயே பவிஷுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த்து. தனுஷ் இயக்கத்தில் உருவான படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில், பவிஷ் அடுத்த படத்தில் தனது தோற்றத்தை சற்றே மாற்றி நடித்து வருகிறார்.
காதல் ஓ காதல்: பவிஷின் அடுத்த படத்திற்கு "காதல் ஓ காதல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் கிரியேட்டர் நாக துர்கா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கடந்த மாதம் மூத்த இயக்குநர் மற்றும் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா படத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், செல்வராகவன் கிளாப் போர்டை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இப்படம் நவீன காதலின் அழகையும், குழப்பங்களையும், கெமிஸ்ட்ரியையும் கொண்டாடும் ஒரு "புத்துணர்ச்சியூட்டும் காதல் பொழுதுபோக்கு" படமாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சம்மர் ரிலீஸ்: முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய பகுதிகளை முடித்த படக்குழு, அடுத்த கட்ட தயாரிப்பிற்கு தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் படப்பிடிப்பை முடித்து, 2026 கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்றைய தலைமுறை உறவுகளை எப்படிப் பார்க்கிறது என்பதை 'லவ் ஓ லவ்' உணர்வுப்பூர்வமாகவும் பொழுதுபோக்காகவும் ஆராயும் என்று இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் கூறினார். "இது விளையாட்டாகவும் ஆழமாகவும் இருக்கும் தருணங்களைப் பற்றியது, இது காதலை மையப்படுத்திய கதை. பவிஷையும் நாக துர்காவையும் பார்வையாளர்கள் மிகவும் யதார்த்தமான களத்தில் காண்பார்கள்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மகேஷ் ராஜேந்திரன் இதற்கு முன் லக்ஷ்மன் இயக்கிய 'போகன்' (2017) மற்றும் 'பூமி' (2021) போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
புதிய இசைக் கலைஞர்கள் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகவுள்ளனர். ஜி.வி. பிரகாஷின் 'பிளாக்மெயில்' படத்தை சமீபத்தில் வெளியிட்ட ஜினிமா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தினேஷ் ராஜ் இப்படத்தை வெளியிடுகிறார். ஜி. தனஞ்செயன் இணை தயாரிப்பாளராக உள்ளார்.


Click it and Unblock the Notifications











