அட்டகத்தி தினேஷ் .. 'அதிரிபுதிரியாக' நடிக்கும் திருடன் போலீஸ்!
குக்கூ படத்துக்குப் பிறகு தினேஷ் நாயகனாக நடிக்கும் படம் திருடன் போலீஸ். இந்தப் படத்தை எஸ்பிபி சரண் தயாரிக்கிறார்.
பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீனமயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாகும் தருவாயில் உள்ளது.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தினேஷ்
இப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு நிலையான பெயரை நிலை நிறுத்திக் கொள்ள மெனக்கெடும் தினேஷுக்கு 'திருடன் போலீஸ்' ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் கார்த்திக்.

ஐஸ்வர்யா
இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா.

ராஜேஷ்
நிதின் சத்யா, பால சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்களாக நடிக்கின்றனர். மூத்த நடிகர் ராஜேஷ் கண்ணியமான ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா
புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் 'திருடன் போலீஸ்' ஜூலை மாதம் இறுதியில் வெளிவருகிறது.


Click it and Unblock the Notifications











