வெட்டியாக டப்ஸ்மாஷ் செய்தேன், ஹீரோவாகிவிட்டேன்: த்ருவ்

வெட்டியாக டப்ஸ்மாஷ் செய்து ஹீரோவானதாக த்ருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்

Recommended Video

வர்மா டீசர் லாஞ்சில் நடந்த கூத்துகள்.. விக்ரம், த்ருவ், மேகா, பாலா பேட்டி

சென்னை: முதல் படத்திலேயே த்ருவ் விக்ரம் மொழிபெயர்ப்பாளராக மாறியது தெரியவந்துள்ளது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் ஒரு காட்சி உண்டு. வடிவேல் அரண்மனையில் இருந்து.. "யாரங்கே... யாரங்கே.." என அழைப்பார். யாருமே வரமாட்டார்கள். ஆனா அந்தப்புரத்திலிருந்து அழைத்த உடன் காவலர்கள் ஓடோடி வருவர். இந்த காட்சி பொதுவாக சினிமா ஷூட்டிங்கில் ஸ்பாட் நிகழ்வுகளுக்கு பொருந்தும் என ஒரு பேச்சு உண்டு. அதாவது ஹீரோயினுக்கு உதவியென்றால் கிரேன் கூட குனிந்து வருமாம்.

Dhruv Vikram about Varma!

பல ஹீரோக்கள் ஹீரோயினை பத்திரமாக பார்த்துக்கொண்டதாகவும், தமிழ் சொல்லிக்கொடுத்ததாகவும் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வரிசையில் த்ருவ் விக்ரமும் சேர்ந்துவிட்டார்.

த்ருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நாயகி மேகா, பாலாவின் இயக்கத்தில் நடித்தது மிகப்பெருமையாக இருந்ததாக குறிப்பிட்டார். த்ருவ் பற்றி பேசும்போது உடனுக்குடன் வசனங்களை மொழிப்பெயர்ப்பு செய்து நடிக்க உதவியதாக பாராட்டினார். மேலும் தமிழகத்தில் இருப்பவர்கள் மிக இனிமையானவர்கள் என்ன சொன்ன மேகா, விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன் என்றார்.

இயக்குனர் பாலாவை நன்கு தெரியுமென்றாலும், முதல் மூன்று நாட்கள் கேமரா முன்பு நிற்க பயமாக இருந்ததாகவும், பிறகு அந்த பயம் போய்விட்டது என்றும் கூறினார் த்ருவ். வீட்டில் வெட்டியாக இருந்தபோது டப்ஸ்மாஷ் பண்ணி வெளியிட்டேன். அதை அப்பா பார்த்தார், பிறகு தயாரிப்பாளர் முகேஷ் பார்த்துவிட்டு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னுடைய நடிப்பு பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கொடுத்தார் எனக் கூறினார்.

கைக்குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போது இடறி விழுவதுபோல் ஆங்காங்கே தடுமாறியவரை விக்ரம் அருகில் இருந்து ப்ராம்ப்ட் செய்து காப்பாற்றினார். யாருக்கு நன்றி சோல்ல வேண்டும், இந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேன்டும் என அருகில் நின்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X