விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கும் பிரபல வாரிசு நடிகர்... கோலிவுட்டை திணறடிக்கும் ஹாட் தகவல்!
சென்னை: பிரபல வாரிசு நடிகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மருத்துவ மாணவர் மருத்துவர், ஸ்ட்ரைட் ஃபார்வர்டு என ஹேண்ட்சம் ஹீரோவாக நடித்து ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றார்.

மகான் போஸ்ட் புரடெக்ஷன்
தொடர்ந்து வர்மா என்ற படத்திலும் நடித்தார் துருவ் விக்ரம். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரமும் நடிக்கிறார்.

அடுத்த ஆண்டு மத்தியில்
மகான் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினின் படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனால் துருவ் விக்ரமை 2022ஆம் ஆண்டு மத்தியில் தான் இயக்குவார் என தெரிகிறது.

இளமையான ரொமான்டிக் படம்
இந்நிலையில் துருவ் விக்ரம்மின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் இளமையான ரொமான்டிக் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் பணியில் தீவிரமாக உள்ளார். அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகே துருவ் விக்ரம் உடனான படத்தின் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

முதல் முறையாக இணைந்து
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதேபோல் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகான் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அப்பா மகனான விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











