வின்டேஜ் விக்ரமை பார்த்துக்கோங்க.. நீச்சல் குளத்தில் மகனுடன் சியான்.. துருவ் விக்ரம் செம ஹேப்பி!
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் பல தடைகளை கடந்து வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியொரு படத்தைக் கொடுத்து வின்டேஜ் விக்ரமை சித்தா பட இயக்குநர் அருண் குமார் மீண்டும் காட்டிவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்தாங்க ரியல் வின்டேஜ் விக்ரம் என நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் துருவ் விக்ரம்.
சேது படத்திற்கு முன்னதாகவே ஒரு டஜனுக்கும் மேலான படங்களில் விக்ரம் நடித்ததும் அந்த படங்கள் எல்லாம் ஓடாமல் அவருக்கு தோல்வியை கொடுத்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். கஷ்டப்பட்டு வந்த நடிகர்களில் ரொம்பவே முக்கியமானவர் சியான் விக்ரம்.

சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தந்தையை போல ஆரம்பத்தில் இருந்தே தோல்விகளை சந்தித்து தன்னைத் தானே செதுக்கி வருகிறார் துருவ் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு தான் கிடைக்கும்: வாரிசு நடிகராக இருந்தால் மற்றவர்களுக்கு கிடைப்பதை விட எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடும். ஆனால், வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த நடிகரின் நடிப்புத் திறமையையும் அவருக்கு கிடைக்கும் பட வாய்ப்பும், அவரை செதுக்கும் இயக்குநரும் தான் முக்கிய காரணம் என்பதை துருவ் விக்ரம் நன்றாகவே புரிந்துக் கொண்டார். ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான அவர் மகான் படத்தில் அப்பாவுக்கே வில்லனாக நடித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ள துருவ் விக்ரம் விரைவில் அப்பாவை போலவே வெற்றிப் படங்களை வரிசையாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்டேஜ் விக்ரம்: தில், தூள், சாமி போன்று சியான் விக்ரம் மீண்டும் படங்களில் நடித்து மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக மாற வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு சரியான தீனியாக வீர தீர சூரன் படம் அமைந்திருக்கிறது. மதுர வீரன் பாடலுக்கு எல்லாம் விக்ரம் சண்டை போட தியேட்டரே தெறிக்குது என்கின்றனர். இந்நிலையில், வின்டேஜ் விக்ரம் என துருவ் விக்ரம் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அப்பாவுடன் நீச்சல் குளத்தில்: தந்தை சியான் விக்ரம் தோளில் ஏறிக் கொண்டு நீச்சல் குளத்தில் நீச்சல் பயின்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் துருவ் விக்ரம். மேலும், இயக்குநர் அருண் குமார் இப்படியொரு படத்தை கொடுத்து தனது தந்தையை சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
வீரமே ஜெயம்: மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக சியான் விக்ரம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்திற்கு வீரமே ஜெயம் என்றும் டைட்டில் வைக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு மேல் சியான் விக்ரம் சொதப்பலான படங்களை கொடுக்க மாட்டார் என்றும் அவரது கதை தேர்வுகள் மற்றும் இயக்குநர் தேர்வுகள் எல்லாம் தரமாக உள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். பைசன் திரைப்படத்தின் மூலம் துருவ் விக்ரமும் வெற்றியை ருசிப்பார் என்றும் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











