தந்தை விக்ரம் சொல்லும் அட்வைஸை துருவ் விக்ரம் கேட்பாரா?.. ஆள் செம விவரமா இருக்காரே ப்பா

சென்னை: துருவ் விக்ரம் இப்போது பயங்கர ஹேப்பியில் இருப்பார். ஏனெனில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த பைசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. இனி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார் அவர். இந்நிலையில் தனது மகன் பற்றி விக்ரம் பேசிய விஷயத்தை இதில் பார்க்கலாம்.

துருவ் விக்ரம் அறிமுகமான முதல் படமே பஞ்சாயத்தை சந்தித்தது. முதலில் பாலா இயக்க; அவர் இயக்கியது பிடிக்காமல் வேறு ஒருவரை வைத்து அதே படத்தை மீண்டும் இயக்கினார்கள் விக்ரம் தரப்பினர். ஆனால் அவர் வெர்ஷனும் சொதப்பிவிட்டது. ஆதித்ய வர்மா படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த மகான் திரைப்படம் நல்ல பெயரை துருவ்வுக்கு பெற்றுக்கொடுத்தாலும் அது முழுக்க முழுக்க விக்ரம் படம் என்றே அடையாளப்பட்டது.

மாரி செல்வராஜுடன் கூட்டணி: முதல் இரண்டு படங்களுமே அப்படி அமைந்துவிட்டதால் தனது மகனுக்கு நல்லதொரு படத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தார் விக்ரம். அப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் சொன்ன பைசன் - காளமாடன் கதையில் நடிக்க கமிட்டானார் துருவ். இப்படத்துக்காக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்வரை காத்திருந்து கடுமையாக பயிற்சி செய்து அனைத்து விதங்களிலும் தயார் ஆனார்.

Dhruv Vikram s Bison Becomes Mega Hit Vikram Shares Emotional Note About His Son
Photo Credit:

பைசன் மெகா ஹிட்: கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் ரிலீஸானது படம். வழக்கம்போல் இப்படமும் மாரி செல்வராஜ் ஸ்டைலில் உருவாகி தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 60 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்து கெத்து காண்பித்தது.

துருவ் விக்ரம் ஹேப்பி அண்ணாச்சி: முக்கியமாக துருவ் விக்ரமுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சீனிலும் அவ்வளவு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது துருவ் விக்ரமின் உழைப்பு மிரளத்தான் வைத்தது. சொல்லப்போனால் இந்தப் படம்தான் அவரது முதல் படம் என்று பலரால் சொல்லப்படுகிறது. இந்நிலையில் துருவ் பற்றி விக்ரம் பேசியிருக்கும் வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விக்ரமின் பழைய பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "ஆதித்ய வர்மா படத்தில் துருவ் நடித்தபோது நான் அவனுடையே இருந்தேன். ஏனெனில் எனக்கும் முதல் படம் தவறிவிட்டது. அப்போதே நான் அவனிடம் எதாவது சொன்னால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிடுவான். ஜாக்கி சானிடம் எப்படி அவரது மகன் நடந்துகொள்வாரோ அதேபோல்தான் அவனும் என்னிடம் நடந்துகொண்டான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X