எங்க கதையில நாங்கதான்டா வில்லன்ஸ்.. மாஸான புகைப்படத்தை பகிர்ந்த துருவ் விக்ரம்!
சென்னை : நடிகர் விக்ரமின் மகன் துருவ் இப்பொழுது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்
ஆதித்ய வர்மா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது விக்ரமுடன் இணையும் மகான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்
கேங்ஸ்டர் கதை களத்தில் மகான் உருவாகி வர இப்பொழுது விக்ரம் பாதி துருவ் பாதி உள்ள மாஸான புகைப்படத்தை துருவ் பதிவிட்டு எங்க கதையில நாங்க தான்டா வில்லன்ஸ் என சூப்பரான ஹின்டை கொடுத்துள்ளார்.

துருவ் ஹீரோவாக
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரமின் நடிப்பு இன்றும் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்த அளவிற்கு நடிகர் விக்ரம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை அப்படியே உள்வாங்கி அதற்காக எந்த அளவுக்கு மெனக்கெட முடியுமோ அந்த அளவிற்கு உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரம் மட்டுமே.
இப்போது விக்ரமைத் தொடர்ந்து அவரது மகன் துருவ் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் தேவர கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் துருவ் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்

கேங்ஸ்டரை மையமாக
தெலுங்கில் எப்படி எடுக்கப்பட்டதோ அப்படியே ஜெராக்ஸ் போல தமிழிலும் காட்சி மாறாமல் எடுக்கப்பட்ட ஆதித்ய வர்மா ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் துருவ் விக்ரமின் அடுத்த படத்தை ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்க இப்பொழுது அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கேங்ஸ்டர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் திரைப்படம் கேங்ஸ்டரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

விக்ரம் நீண்ட தலைமுடியுடன்
மகான் படத்திலிருந்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்க இந்த திரைப்படம் மிக விரைவிலேயே நேரடியாக ஓடி டியில் வெளியாகிறது என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விக்ரம் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார். துருவ் அப்படியே ஆப்போசிட்டாக போலீஸ் அதிகாரி போல ஷாட் ஹேர் ஸ்டைலில் முறுக்கு மீசையுடன் நடித்துள்ளார். இருவரும் யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது
Recommended Video

வில்லன்ஸ்
இந்த நிலையில் மகான் படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அட்டகாசமான புகைப்படம் ஒன்றை துருவ் பகிர்ந்துள்ளார்.
அதில் மகான் படத்தின் கெட்டப்பில் விக்ரம் முகம் பாதி துருவ் முகம் பாதி என இரண்டும் சேர்ந்த புகைப்படம் பார்க்கவே செம மாஸாக இருக்க அதற்கு வில்லன்ஸ் என கேப்ஷன் போடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் மகான் படத்தில் இருவரும் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்களா என்ற குழப்பம் கலந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











