கட்டுமஸ்தான கட்டுடலைக்காட்டும் துருவ் விக்ரம்.. இதயத்தை பரிசளிக்கும் ரசிகைகள்!

சென்னை : பிரபல தமிழ் நடிகரின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இப்பொழுது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர், ஒரு சில ஷார்ட் பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இப்பொழுது துருவ் விக்ரம் அரை நிர்வாணத்தில் நீச்சல்குளத்தின் அருகில் நின்றவாறு கட்டுடல் மேனியுடன் எடுத்துள்ள போட்டோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

சினிமாவில் ஹீரோவாக

சினிமாவில் ஹீரோவாக

பிரபலமான நடிகர்கள் தங்களின் வாரிசுகளையும் திரைப்படங்களில் அறிமுகப்படுத்துவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அப்படியே கிடப்பில் போடப்பட்டு

அப்படியே கிடப்பில் போடப்பட்டு

முதல் படத்தை இயக்குனர் பாலா தான் இயக்க வேண்டும் என விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் ஆசைப்பட்ட நிலையில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை "வர்மா" என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்து படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் அத்திரைப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு மீண்டும் வேறொரு இயக்குனருடன் இணைந்து "ஆதித்ய வர்மா" என்ற பெயரில் உருவாகி பின் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்

இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்

துருவ் விக்ரம் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் முதல் படத்திலேயே ஆரம்பித்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். நடிகராக வலம் வரும் இவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி இருக்கும் நிலையில் விரைவில் இவரை இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.

இணையதளத்தை தாறுமாறு

இணையதளத்தை தாறுமாறு

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மிகப்பெரிய அறிமுகத்திற்கு பிறகு இப்பொழுது துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து முதல்முறையாக நடித்துவரும் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வர, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை தாறுமாறு செய்ததோடு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

அரை நிர்வாணத்தில்

அரை நிர்வாணத்தில்

இவ்வாறு விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் திரைப்படத்திற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் என சொல்லப்பட அதற்காக உடலை கட்டுமஸ்தாக உருவாக்கி சிக்ஸ்பேக் முதற்கொண்டு பார்க்கவே பிரமிக்கும் வகையில் உடம்பை கச்சிதமாக ஏற்றியுள்ள துருவ் விக்ரமின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வரும் வேளையில் இப்பொழுது நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு அரை நிர்வாணத்தில் இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் இப்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகைகள் குஷியில் ஆழ்ந்திருக்க துருவ்வின் இந்த செம ஹாட் புகைப்படம் ரசிகைகளின் பேராதரவோடு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X