சர்தார் 2வுக்கு செம செக்.. துருவ் விக்ரம் 'பைசன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாரி செல்வராஜ் ரெடி!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான "பைசன் காளமாடன்" திரைப்படம், தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு கபடி விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

Dhruv Vikram s Bison movie will release on this Diwali and ready to clash with Sardar 2

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் படம்: இயக்குநர் பா. ரஞ்சித்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் படங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். முதல் படமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன் மற்றும் கடைசியாக வெளியான வாழை என அனைத்து படங்களுமே தொடர்ந்து தரமான படங்களாகவும் வெற்றிப் படங்களாகவும் மாறி வருகின்றன.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்: கடந்த ஆண்டு வெளியான தங்கலான் படத்தை பா. ரஞ்சித் இயக்க அதில் ஒட்டுமொத்த உசுரையும் கொடுத்து சீயான் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வெற்றிப் பெறவில்லை. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் பைசன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். விரைவில் அந்த படம் திரைக்கு வருகிறது.

தீபாவளி ரிலீஸ்: அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

துருவ் விக்ரமுக்கு ஹிட் கிடைக்குமா?: சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் மூலம் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சொதப்ப ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் படமும் பெரிதாக ஓடவில்லை. ஆனால், மாரி செல்வராஜ் படம் துருவ் விக்ரமுக்கு நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபடி வீரர் மண்ணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்தார் 2வுக்கு செக்: இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பைசன் படமும் தீபாவளி ரிலீஸை குறி வைத்துள்ளது. மேலும், சில படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. இந்த இரண்டு படங்களிலும் மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X