Dhurandhar 2: தேசபக்தியின் உச்சம்.. துரந்தர் 2வுக்கு அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா கொடுத்த விமர்சனம்!
ஹைதராபாத்: புதிதாக அல்லு அர்ஜுன் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ள நிலையில், துரந்தர் 2 படத்தை தனது தியேட்டரிலேயே எந்தவொரு கூட்ட நெரிசலும் இல்லாமல் கண்டு ரசித்தார். புதிதாக திருமணமான விஜய் தேவரகொண்டாவும் அல்லு அர்ஜுன் தியேட்டரில் துரந்தர் 2 படத்தை பார்த்தார்.
அல்லு அர்ஜுன் துரந்தர் 2 படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியும் படத்தை பாராட்டியும் கொடுத்துள்ள விமர்சனத்துக்கு நடிகர் மாதவன் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

துரந்தர் 2 திரைப்படம் தேசபக்திக்கொண்ட ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய படம் என அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
அல்லு அர்ஜுன் விமர்சனம்: ஒரு பக்காவான ஸ்வாக் உடன் தேசப்பற்று கருத்துக்களை துரந்தர் 2 திரைப்படம் கச்சிதமாக பொருத்தியுள்ளது. நடிகர் மாதவனின் அசத்தலான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. என்னுடைய சகோதரர் போன்ற ரன்வீர் சிங் படத்தில் கொடுத்துள்ள வெர்சடைலான நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். இயக்குநர் ஆதித்யா தர் தேசபக்திக் கொண்ட ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைக்கும் அளவுக்கு ஒரு பக்காவான படத்தைக் கொடுத்துள்ளார். அவர் பந்தை அவுட் ஆஃப் தி பார்க்கில் அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். உங்களை போன்ற இயக்குநர்கள் இந்திய சினிமாவில் இருப்பது ரொம்பவே சந்தோஷம், நீங்க ஒரு ஷோ ராக்கர் என பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
விஜய் தேவரகொண்டா விமர்சனம்: நாளை முதல் இந்திய சினிமா மற்றும் கலாசாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. "பாரத் மாதா கி ஜெய்" என்கிற 4 வார்த்தைகள் மட்டுமே எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ஆதித்யா தர் ஒரு மேட் ஜீனியஸ், ரன்வீர் சிங் எல்லா இடத்துலயும் வெடிக்கிறாரேப்பா. மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா மற்றும் ஜமீல் மாமா எல்லாருடைய நடிப்பும் சிறப்பு. சாச்வத் சச்தேவ் பின்னணி இசை தீயா இருக்கு என தனது விமர்சனத்தை அல்லு அர்ஜுன் தியேட்டரில் பார்த்து விட்டு புது மாப்பிள்ளை விஜய் தேவரகொண்டா கொடுத்துள்ளார்.
பாராட்டும் எதிர்ப்பும்: துரந்தர் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 4 மணி நேர படத்தை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் ஸ்க்ரீன்பிளே செய்து காட்டிய விதம் மற்றும் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்டுகளை அங்காங்கே வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளதாக பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். தி காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி படங்களுக்கும் துரந்தர் 2 படத்துக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என நெட்டிசன்கள் படத்திற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











