விஜய்யை பற்றி நெகட்டிவ்வாக பேசிய நடிகர்.. படத்திலிருந்து தூக்கிய அஜித்?.. அட ஏகே வேற லெவல் செய்கை

சென்னை: அஜித்தும், விஜய்யும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள். ரஜினி - கமல் போட்டிக்கு பிறகு அஜித் - விஜய் போட்டிதான் அதிகம் திரைத்துறையில் பேசப்பட்டது. இப்போது இரண்டு பேரும் தனித்தனி பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகியிருப்பதாகவும் பேச்சு ஓடுகிறது. நடந்து முடிந்த தேர்தலில்கூட விஜய்க்குதான் அஜித் வாக்களித்திருப்பார் என்பது விஜய் ரசிகர்களின் நம்பிக்கை. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்த பிறகு அவருக்கென செல்வாக்கு வளர்ந்தது. இதன் காரணமாக அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். அதனை ஏற்று அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து அவரை எப்படியாவது கோட்டைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் அவரது தொண்டர்கள் ஆர்வத்துடன் உழைத்திருக்கிறார்கள்.

Did Ajith Remove an Actor Over Vijay Remarks Viral Kollywood Rumour Explained
Photo Credit:

மே நான்கில் ரிசல்ட்: அந்த உழைப்புக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைத்திருக்கின்றன என்பது நாளை மறுநாள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தெரிந்துவிடும். கண்டிப்பாக நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என்பது விஜய் ரசிகர்கள், தொண்டர்களின் அதீத நம்பிக்கை. எக்ஸிட் போல் சாதகமாக வராவிட்டாலும் அவர்கள் உறுதியோடு நிற்கிறார்கள். விஜய்யும் அதே நம்பிக்கையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
ஜனநாயகன் லீக்.. எடிட்டரிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி.. என்ன சொன்னாரு தெரியுமா?
ஜனநாயகன் லீக்.. எடிட்டரிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி.. என்ன சொன்னாரு தெரியுமா?

அஜித்துடன் நல்லுறவு: இதற்கிடையே விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அஜித்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் ஆர்வத்துக்குரிய ஒன்றாக இருந்தது. அவரும் கரூர் துயர சம்பவத்தின்போது அளித்த ஒரு பேட்டியில், நடந்தவற்றுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்று கூறினார். அப்போதிருந்து அஜித் மீது விஜய் ரசிகர்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் வந்துவிட்டது. பரப்புரையின்போது அவ்வப்போது அஜித்தின் பெயர் அடிபட்டது என்பது கவனிக்கத்தக்கது.

மறுத்த அஜித்: அதுமட்டுமின்றி வாக்குப்பதிவின்போது, மாற்றம் தேவையில்லை என்று தான் சொன்னதாக வெளியான செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார். அதுவும் அஜித்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு காரணமானது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று திரைத்துறையில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது, அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில்கூட வரலாம் என்று தெரிகிறது.

தூக்கிய அஜித்: அதற்கு முன்னதாக படத்தில் நடிப்பவர்களை இயக்குநர் செலெக்ட் செய்தாராம். அதில் ஒரு நடிகரும் அடக்கமாம். அவரை முக்கியமான ரோலில் நடிக்க ஆதிக் விரும்ப; அஜித்தும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் தேர்தல் காலத்தில் விஜய் பற்றி ரொம்பவே அந்த நடிகர் நெகட்டிவ்வாக பேசியதால்; ஆதிக்கை தொடர்புகொண்டு, விஜய்யை தவறாக பேசுபவர் படத்தில் வேண்டாம் தூக்கிவிடுங்கள் என கூறியதாக வலைப்பேச்சு டீம் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X