அல்லு அர்ஜுனை மேடையிலேயே முறைத்தாரா தம்பி பொண்டாட்டி.. பக்கத்தில் நின்னவரை கடைசியில தள்ளிட்டாங்களே?

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டும் என்றால் 42 ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என பிரபலம் ஒருவர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக அதற்கு அல்லு அர்ஜுன் டீம் மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி சம்மந்தப்பட்ட அந்த வீடியோவை நிக்கியும் அந்த பேட்டியை நடத்தியவரை மன்னிப்பும் கேட்க வைத்தனர்.

அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷுக்கும் நைனிகா ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. தம்பியின் திருமண விழாவுக்காக துபாயில் பார்ட்டி, ஹைதராபாத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் அல்லு அர்ஜுன் முன் நின்று நடத்தி பலரையும் பிரம்மிக்க வைத்தார்.

Did Allu Arjun Get Snubbed on Stage Brother s Wife s Reaction Sparks Buzz

சிரஞ்சீவி, பவன் கல்யான், சூர்யா, ரேவந்த் ரெட்டி, நாகார்ஜுனா, நாக சைதன்யா, ராம் சரண், ராணா டகுபதி, ராஷி கன்னா என ஏகப்பட்ட பிரபலங்கள் திருமண விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில், அல்லு அர்ஜுனை முறைத்து மேடையில் இருந்து நகர சொல்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பி பொண்டாட்டி முறைத்தாரா?: அல்லு அர்ஜுன் திருமணத்தின் போது தனது தம்பி அல்லு சிரிஷ் மனைவி நைனிகா அருகே வந்து நின்று போஸ் கொடுத்த போது அவர் அல்லு அர்ஜுனை பார்த்து முறைத்தார் என்றும் உடனடியாக இன்னொரு பெண் அங்கே வந்து நிற்கிறார். மேலும், அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டியும் அல்லு அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அல்லு அர்ஜுனை கடைசியில் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக ஒரு வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Did Allu Arjun Get Snubbed on Stage Brother s Wife s Reaction Sparks Buzz
Photo Credit:

அல்லு அர்ஜுனுக்கு எதிராக: திருமணத்தில் அடுத்தடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க மற்றவர்கள் வந்த நிலையில், அல்லு அர்ஜுன் ஒதுங்கி போயிருப்பார் என்றும் அதை இப்படியெல்லாம் அவருக்கு எதிராக திரிக்கக் கூடாது என்றும் அல்லு அர்ஜுன் உடன் பல தருணங்களில் நைனிகா ரெட்டி அருகே நின்று போஸ் கொடுத்துள்ளாரே என்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திருமண நாள்: மார்ச் 6ம் தேதி தனது 15வது வருட திருமண நாளையும் தனது தம்பியின் திருமணத்தை ஒன்றாகவே அல்லு அர்ஜுன் கொண்டாடினார். மனைவி சினேகா ரெட்டியுடன் இருக்கும் போட்டோக்களையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அப்படிப்பட்ட மனிதரை இப்படியெல்லாம் அவதூறாக பேசக்கூடாது என புஷ்பா ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X