கைவிட்ட காங்கிரஸ்.. விரக்தியில் தான் விஜய் இப்படி வெளியே வந்தாரா?.. சீக்கிரமே திருமணம்?
சென்னை: தவெக கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் கப்பு முக்கியம் பிகிலே என பலரும் ஆதரவு அளித்தனர். ஆனால், விஜய் குறித்த ரகசியங்கள் அம்பலமான நிலையில் தான் எந்தவொரு கட்சியும் அவருடன் கூட்டணி வைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் கசியத் தொடங்கியுள்ளன.
கடைசி வரை ராகுல் காந்தியையும் காங்கிரசையும் விஜய் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் சங்கீதாவின் விவாகரத்து மனு கசிந்த நிலையிலும் அமைதி காத்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடாமல் இருந்த விஜய் காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன் கூட்டணி வைத்த விரக்தியில் தான் தற்போது த்ரிஷாவுடன் வெளியே வந்து விட்டாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

மேலும், சங்கீதாவுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டு விரைவில் த்ரிஷாவை அதிகாரப்பூர்வமாக விஜய் திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
பிடிக்கலைன்னா விட்றணும்: திருமண வாழ்க்கையில் உள்ள பிணைப்பு என்கிற பந்தம் அறுந்து விட்டால் அதை மீண்டும் இணைக்க முயற்சிப்பதை விட பிடித்த வாழ்க்கையை தேடி மனிதர்கள் செல்வது சமீப காலமாக இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. எத்தனை வருடங்கள் வாழ்ந்தால் என்ன எத்தனை வயது ஆனால் என்ன க்ரே டைவர்ஸ் தொடர்ந்து இந்தியாவில் டிரெண்டாகி வரும் நிலையில், விஜய்யும் அதை ஏற்றுக் கொண்டார் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.
விவாகரத்தும் 2வது திருமணமும்: தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான், அமீர்கான், ஜி.வி. பிரகாஷ், ரவி மோகன் என பலரும் சமீப காலங்களாக தங்களது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டனர். நாக சைதன்யா சோபிதா துலிபாலாவையும், சமந்தா ராஜ் நிடிமோருவையும் திருமணம் செய்துக் கொண்டபோது விஜய் - த்ரிஷா திருமணம் செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விரைவில் திருமணம்?: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் வெளியே வரக் காரணமே காங்கிரஸ் கட்சியும் தவெக தலைவரை தனிமையில் தவிக்க விட்டது தான் எனக்கூறுகின்றனர். வரும் தேர்தலில் மக்களும் விஜய்க்கு வாய்ப்புக் கொடுக்காமல் தவிக்க விட்டால் உடனடியாக த்ரிஷாவை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார் என்றும் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விடுவார் என்றும் திமுகவினர் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











