twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாங்குநேரி கோவிலுக்குள் சட்டையுடன் போய் விதிமுறைகளை மீறினாரா 'பாபநாசம்' கமல்..?

    |

    நாங்குநேரி: பாபநாசம் படப்பிடிப்புக் குழுவினர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். படத்தின் நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட குழுவினர் நாங்குநேரி வாணுமாமலை பெருமாள் கோவிலுக்குள் படப்பிடிப்புக்காக சென்றபோது கோவில் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    ஏற்கனவே இந்த கோவிலின் ஜீயரை கமல் சந்தித்தது குறித்து பரபரப்பு கிளம்பி உலா வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கோவிலுக்குள் படப்பிடிப்புக் குழுவினர் விதிகளை மீறி நடந்து கொண்டதாக முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.

    குற்றாலத்தில் பாபநாசம்

    குற்றாலத்தில் பாபநாசம்

    குற்றாலம், மேக்கரை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் என்ற படத்தின் படிப்பிடிப்பு நடந்து வருகிறது.

    30ம் தேதி நாங்குநேரியில்

    30ம் தேதி நாங்குநேரியில்

    இந்நிலையில் 30ம் தேதி நாங்குநேரி பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு நடந்த காலையிலேயே கோயிலில் படப்பிடிப்பு குழுவினர் குவிந்தனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    3 மணிக்கு வந்த கமல்

    3 மணிக்கு வந்த கமல்

    பின்னர் மாலை 3 மணிக்கு கமல் தனது பாதுகாவலர்களுடன் வந்தார். கோயிலுக்கு வெளியே கோபுர வாசலுக்கு வடக்கு பகுதியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலின் உள்பகுதியில் உள்ள மண்டபம் ஓன்றிலும் படப்பிடிப்பு நடந்தது. மேலும் கோயிலின் மூலதானஸ்த்திற்கும் நடிகர் கமலஹாசன் சென்றார். பின்னர் அவர் மடத்தில் உள்ள ஜீயர் சுவாமியை சந்தித்து பேசினார்.

    செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

    செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

    படிப்பிடிப்பு நடந்த போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கவும் அக்குழுவினர் எச்சரித்தனர். இந்நிலையில் அங்கு வந்த கமலஹாசனிடம் கேட்டபோது படப்பிடிப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.

    சட்டை போடக் கூடாது

    சட்டை போடக் கூடாது

    நாங்குநேரி வாணுமாமலை பெருமாள் கோயிலை பொருத்தவரை கோயிலுக்குள் நுழைய சில விதிமுறைகள் உள்ளன. பெண்கள், 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள், போலீசார் மட்டுமே சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டு. மற்றவர்கள் சட்டையுடன் செல்ல அனுமதி இல்லை.

    சட்டையுடன் போன கமல்

    சட்டையுடன் போன கமல்

    இந்த நிலையில் கோயிலுக்குள் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கமலஹாசன், பாதுகாவலர்கள் சட்டையை கழற்றாமலேயே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனம் எழுந்து வருகிறது.

    English summary
    Did Kamal and his Papanasam movie team violate temple rules when they had shooting in Vanumamalai Perumal temple.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X