கூலி கதை மொத்தமா ரிவீல் ஆகிடுச்சே.. டிரைலர் எப்படி இருக்கு? லோகி ஏதாவது சர்ப்ரைஸ் மிச்சம் வச்சிருப்பாரா?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி படத்தின் டிரைலர் இன்று வெளியானது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், கூலி படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது.

கூலி படத்தின் டீசர் வெளியாகாமல் இருந்த நிலையில், இந்த படத்தின் கதை என்னவென்றே புரியாமல் இருந்த ரசிகர்களுக்கு டிரைலரில் அதிகம் லோகேஷ் கனகராஜ் ரிவீல் செய்ய மாட்டார் என்றே நம்பி இருந்தனர்.

Did Lokesh Kanagaraj reveals full story of Coolie in a 3 minutes trailer
Photo Credit:

ஆனால், ஒட்டுமொத்த கதையையே கூலி படத்தின் டிரைலரில் எடிட்டர் பிலோமின் ராஜ் இப்படி கட் செய்து காட்டிக் கொடுத்து விட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தேவா பெயரும் நண்பனுக்காக போராடும் கதையும்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தளபதி படத்தில் அவருடைய கதாபாத்திர பெயரான தேவா தான் இந்த படத்திலும் அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. தேவா என்கிற பெயரை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வைத்த நிலையில், நண்பனை கொலை செய்த கும்பலையும் நண்பனின் மகளை காப்பாற்றும் மிஷனிலும் தேவா இறங்க கூலியாக மாறி வில்லனின் ஹார்பரில் வேலை பார்த்துக் கொண்டே சம்பவம் செய்வது தான் கதையாக இருக்கும் என்பதை டிரைலர் உணர்த்துகிறது.

Take a Poll

லோகேஷ் சர்ப்ரைஸ் வைத்திருப்பாரா?: அமீர்கான் நடிப்பது தொடங்கி அனைத்தையும் லோகேஷ் கனகராஜ் கூலி டிரைலரிலேயே காட்டிவிட்டார். இதற்கு மேல் பெரிதாக எதையும் எதிர்பார்த்து வேண்டாம் என சொல்ல முயற்சி செய்கிறதா படக்குழு? அல்லது இதையும் தாண்டி படத்தில் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக பெரிய சர்ப்ரைஸ் வைத்திருப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

டிரைலர் எப்படி இருக்கு?: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்வாக் ஒன்று போதும் ஒட்டுமொத்த டிரைலரும் வேறலெவல் ஹைப்புக்கு சென்று விடுகிறது. நாகார்ஜுனாவின் வில்லத்தனம், அமீர்கானின் ஆக்ரோஷம், செளபின் சாஹிரின் நடிப்பு, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் போர்ஷன் என ஒவ்வொரு விஷயமும் படத்துக்கு கண்டிப்பாக கைகொடுக்கும் என்றே தெரிகிறது. ஆனால், பான் இந்தியா வெற்றியை கொடுக்கும் பிரம்மாண்டமாக படமாக கூலி இருக்க வேண்டும் என்றால் வில்லன் செய்யும் தப்பான விஷயம் செம ஸ்ட்ராங்காகவும் புதுசாகவும் இருக்க வேண்டும். அதை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் செய்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X