அடுத்து இவர் இயக்கத்தில்தான் நடிக்கிறாரா..? ரசிகரின் கேள்விக்கு அப்படி பதில் சொன்ன ஷாருக் கான்!

By

சென்னை: தான் அடுத்து இயக்கப் போகும் படத்தின் இயக்குனரை, நடிகர் ஷாருக்கான் பூடகமாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Arnold Massive Contribution | Shah Rukh Khan Donated? | Lock Down

இந்தி நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்த ஸீரோ என்ற படத்தில்நடித்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை ஷாருக்கான் உடனடியாக ஆரம்பிக்கவில்லை.

அட்லி, வெற்றிமாறன்

அட்லி, வெற்றிமாறன்

நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அட்லியிடமும் கதை கேட்டிருந்தார். இதற்கிடையே, தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய ஷாருக், சில இயக்குனர்களை மும்பைக்கு அழைத்திருந்தார். அதில் அட்லீயும் வெற்றிமாறனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாருக் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆஷிக் அபு

ஆஷிக் அபு

ஆனால், ஷாருக் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இயக்கும் படத்தில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர், மலையாள இயக்குனர் ஆஷிக் அபு, ஷாருக் படத்தை இயக்கப் போவதாக சொன்னார். இவர், டாடி கூல், சால்ட் அண்ட் பெப்பர், 22 ஃபீமேல் கோட்டயம் உட்பட சில மலையாளப் படங்களை இயக்கியவர்.

ரசிகர் கேள்வி

ரசிகர் கேள்வி

இதற்கிடையே ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் அவர் நடிப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், ஷாருக் தரப்பில் இருந்து வழக்கம் போல எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளத்தில் பதில் சொன்னார் ஷாருக். அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் அடுத்த பட இயக்குனர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன்

அந்த ரசிகர், இயக்குனர்கள் மார்டின் ஸ்கோர்சஸ், கிறிஸ்டோபர் நோலன் ஆகியோரில் உங்களுக்கு யாருடன் நடிக்க விருப்பம் என்று கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஷாருக்கான், இருவருமே சிறந்த இயக்குனர்கள். அதனால்தான் அவர்களை சந்தித்தேன். ஆனா நம்மகிட்ட ராஜூ (ராஜ்குமார் ஹிரானி) இருக்காரில்ல' என்று தெரிவித்துள்ளார்.

பீகே இயக்குனர்

பீகே இயக்குனர்

இதையடுத்து ரசிகர்கள், ஷாருக், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இவர், சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ், லகே ரஹோ முன்னா பாய், 3 இடியட்ஸ், ஆமிர்கானின் பீகே, சஞ்சு ஆகிய படங்களை இயக்கியவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X