நான் ரஜினி சார் மாதிரி தான் பண்றேன்.. விஜய் மாதிரிலாம் தெரியல.. சிவகார்த்திகேயன் பளிச் பேட்டி!
சென்னை: மாவீரன் என ரஜினிகாந்தின் பட தலைப்பை வைத்து நடித்து முடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள அந்த படத்துக்காக விரைவில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "நான் ரஜினி சார் மாதிரி தான் பண்றேன்" என வெளிப்படையாக பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்.

ஆடியோ லாஞ்ச் பேச்சு
ஆடியோ லாஞ்ச்சில் மைக் கிடைத்த உடனே முன்னணி நடிகர்கள் மாஸ் ஸ்பீச் கொடுத்து தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர். கவுதம் கார்த்திக்கின் 'ஆகஸ்ட் 16, 1947' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் ஏகப்பட்ட அப்டேட்களையும் செம மாஸான ஸ்பீச்சையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மாவீரன் ஷூட்டிங் ஓவர்
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள ஹாட் அப்டேட்டையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் சொல்லி தனது ரசிகர்களுக்கு சீக்கிரமே வெள்ளித்திரையில் மாவீரனாக தான் மாஸ் காட்டப் போவதை அறிவித்துள்ளார்.

இனி மான் கராத்தே இல்லை
இனிமே மான் கராத்தேலாம் பண்ண முடியாது. ஸ்ட்ரெய்ட்டா கராத்தே தான் என ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயன் பேசியதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் டிரெண்டாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியடைந்த நிலையில், பக்காவாக கம்பேக் கொடுக்கப் போகிறோம் என்கிற தன்னம்பிக்கை நிறையவே சிவகார்த்திகேயனிடம் தென்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சண்டையே இல்லை
இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் உங்களுக்கும் சண்டை என சொல்லப்பட்டதே என்கிற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன். அப்படியொரு விஷயத்தை யாரு கிளப்பி விட்டதுன்னே தெரியல. நாங்க ரெண்டு பேரும் செம ஜாலியாத்தான் வொர்க் பண்ணினோம். வெற்றிகரமாக மாவீரன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மடோன் அஸ்வின் பிரதர் கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங்களை நான் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறி அந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினி சாயல் தான்
சினிமாவில் சிவகார்த்திகேயன் அதிகமாக ரஜினி சாயலில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வரும் முன்னர், 1000 மேடைகளுக்கு மேல் ரஜினி சார் போல மிமிக்ரி செய்து தான் வளர்ந்தேன். அவரது சாயல் இருப்பதாக சொன்னால் நிச்சயம் சந்தோஷம் தான் என்றார்.

விஜய் போல தெரியல
ரஜினி சாயலில் இருப்பதாக சொன்னாலும், உங்க கிட்ட விஜய் சாயல் இருக்கே என சில செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மற்ற நடிகர்கள் போலவும் என் நடிப்பில் சாயல்கள் தெரியலாம். ஆனால், எனக்கு அது சரியாக தெரியவில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் போல நான் பண்றேன் என சொல்றது உண்மை தான். ஆனால், அதனை பிளான் பண்ணியெல்லாம் பண்ணல, அது அப்படியே இயல்பாவே வந்துடுது என பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்.

விஜய்யை அவாய்டு பண்ணுகிறாரா சிவகார்த்திகேயன்
இசை வெளியீட்டு விழாவில் அஜித் சார் சொல்வது போல என பேசி கைதட்டல்களை அள்ளிய சிவகார்த்திகேயன். ரஜினிகாந்த் சாயல் கமெண்ட்டுக்கும் ஆமாம் என ஆமோதித்தார். ஆனால், விஜய் போல பண்றீங்களேன்னு கேட்டதற்கு நைஸாக அங்கிருந்து டாப்பிக்கை மாற்றி சிவகார்த்திகேயன் பேசிய நிலையில், விஜய்யை சிவகார்த்திகேயன் தெளிவாக அவாய்டு பண்ணுகிறார் பாருங்க என ரஜினிகாந்த் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் சண்டையை ஆரம்பித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











