அடக்கொடுமையே.. கோலிவுட்டின் அக்ஷய் குமாரா சூர்யா?.. கங்குவா படம் இத்தனை கோடி நஷ்டமா?
சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது. கங்குவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்கா, கேரளா, ஆந்திரா ரசிகர்கள் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய நிலையில், முதல் நாளே பெரிய வசூல் வேட்டையை நடத்த முடியவில்லை.
தமிழ்நாட்டில் முதல் காட்சி வெளியான உடனே ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை பலரும் தலை வலிக்குதுடா சாமி என்றும் காது ரிப்பேர் என்றும் சவுண்டை குறை சவுண்டை குறை என கங்குவா படத்தில் சூர்யா பெருமாச்சி என கத்துவதை விட அதிகமாக கத்தியதன் விளைவாக படம் பாக்ஸ் ஆபிஸில் படுத்துவிட்டது.

படத்தின் புரமோஷனின் போது கங்குவா 1000 கோடி வருமா என தொகுப்பாளினி ஒருவர் கேட்க 2000 கோடி வரும்னு எதிர்பார்க்கிறோம் என ஞானவேல் ராஜா பேசியதையும் இந்த படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என யார் பார்த்தாலும் வாயை பிளந்துக் கொண்டு பார்ப்பார்கள் என சூர்யா பேசியது என அனைத்தும் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
ஜோதிகா பார்த்த வேலை: கடைசியாக நயன்தாரா தனுஷுக்கு எதிராக 3 பக்கத்துக்கு திட்டி எழுதிய கடிதம் வெளியாகி கங்குவா பேஷன்ட்டை டிஸ்சார்ஜ் செய்த நிலையில், மீண்டும் ஜோதிகாவின் ட்வீட் மறுபடியும் கங்குவாவை மீம் கன்டென்ட்டாக மாற்றியது. தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாக கங்குவா மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு கூட இந்த படத்துக்கு கிடைக்கவில்லை என்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
கோலிவுட்டின் அக்ஷய் குமாரா சூர்யா?: பாலிவுட்டில் கான் நடிகர்களுக்கே சவால் விட்டு வசூல் வேட்டை நடத்திய அக்ஷய் குமார் திடீரென தான் நடிக்கும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் ஃபிளாப்பாக ஆரம்பித்ததும் அப்செட் ஆகிவிட்டார். தொடர்ந்து 6 படங்களுக்கும் மேல் அக்ஷய் குமார் கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. இந்த ஆண்டு அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் வெளியான படே மியான் சோட்டே மியான் படமும் படுதோல்வியை சந்தித்தது. சூர்யா தயாரிப்பில் அக்ஷய் குமார் நடித்த சூரரைப் போற்று இந்தி ரீமேக் படமும் சொதப்பி விட்டது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக கேமியோவில் நடித்து சூர்யா மிரட்டியதை போல இந்த ஆண்டு அக்ஷய் குமார் கேமியோவாக நடித்த ஸ்ட்ரீ 2 மற்றும் சிங்கம் அகைன் படங்கள் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கங்குவா இத்தனை கோடி நஷ்டமா?: 300 முதல் 350 கோடி என இதுவரை சூர்யா படங்கள் எதுவுமே வசூல் செய்யாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் கங்குவா படத்தை உருவாக்கி ரிலீஸ் செய்த நிலையில், இதுவரை அந்த படம் 150 கோடி கூட வசூல் செய்யவில்லை என்கின்றனர். சுமார் 180 கோடி ரூபாய் வரை படம் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவற்றை வைத்து தான் ஓரளவுக்கு டேமேஜை ஸ்டூடியோ க்ரீன் சரி செய்ய வேண்டும் என்கின்றனர். கங்குவா படத்தின் பிரம்மாண்ட தோல்வி அடுத்து வரும் கார்த்திக் சுப்புராஜின் சூர்யா 44 மற்றும் ஆர்ஜே பாலாஜியின் சூர்யா 45 உள்ளிட்ட படங்களையும் பாதிக்குமா? அல்லது சூர்யா கம்பேக் கொடுப்பாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











