விஜய், ரஜினியால முடியாத விஷயத்தை சாதிப்பாரா விஜய் சேதுபதி?.. 1000 கோடி வசூலை அள்ளுமா மகாராஜா?

சென்னை: ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து ஏற்கனவே 1000 கோடி வசூல் படத்தில் தனது பங்களிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தால் படங்கள் ஓடாது என்றும் அவர் வில்லனாகத்தான் லாயக்கு என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இருங்க பாய் என 50வது படத்தில் செஞ்சுரி அடித்து மாஸ் மகாராஜாவாக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2, தளபதி விஜய்யின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் 1000 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

maharaja vijay sethupathi bigg boss tamil

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா படம் 1000 கோடி வசூல் செய்ய ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக வெளியான தகவலால் கோலிவுட் தற்போது நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. சீனாவில் வரும் நவம்பர் 29ம் தேதி மகாராஜா அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாவதால் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது என்கின்றனர்.

1000 கோடி வசூல் செய்த இந்திய படங்கள்: இந்திய சினிமாவில் அசால்ட்டாக 1000 கோடி வசூலை ஈட்டி உண்மையாகவே பான் இந்தியா வெற்றியை கடந்த சில ஆண்டுகளாக பல படங்கள் பெற்றுள்ளன. ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் உள்ளிட்ட படங்கள் 1000 கோடி வசூலை ஈட்டின. அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் 2000 கோடி வசூல் சாதனையை படைக்க அந்த படத்தின் சீன ரிலீஸ் பெரும் உதவியாக மாறியது. தென்னிந்தியாவில் பிரபாஸின் பாகுபலி 2 திரைப்படம் 1800 கோடி வசூலை ஈட்டி மாஸ் காட்டியது. கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலை கடந்தது. யஷ் நடித்த கன்னட படமான கேஜிஎஃப் 2 இந்திய ரசிகர்களின் ஆதரவால் 1000 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிக்கும் கோலிவுட்: கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய் நடித்த லியோ படங்கள் 600 கோடியை ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு வெளியான வேட்டையன் மற்றும் கோட் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்கள் காரணமாக 500 கோடி வசூலை கூட இரண்டு படங்களும் தொடவில்லை. சூர்யா நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் வெளியான கங்குவா திரைப்படமும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படமும் மெகா தோல்வியைத் தழுவின.

40 ஆயிரம் ஸ்க்ரீனில் மகாராஜா ரிலீஸ்: இந்நிலையில், சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அடுத்ததாக சீனாவில் சுமார் 40 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பாகுபலி 2 படமே அங்கே அதிகபட்சமாக 18 ஆயிரம் திரைகளில் தான் வெளியாகின. மகாராஜா படம் சீன ரசிகர்களை கவர்ந்துவிட்டால் 1000 கோடி வசூல் அசால்ட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி லாபத்தை அள்ளித் தந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூலை விஜய் சேதுபதி அள்ளிப் போட்டு எடுத்துட்டு வருவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

maharaja vijay sethupathi bigg boss tamil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X