Knee Cap போட்டு சர்ச்சில் மண்டியிட்டாரா விஜய்?.. இது வேறயா?.. பிரபலம் போட்டு தாக்கிட்டாரு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் விஜய் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறார். திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூரிலும் அவர் களம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பரப்புரையை ஒன்றும் அவ்வளவு சூப்பராக செய்திடாத விஜய்; நேற்று திருச்சியில் இருக்கும் சர்ச் ஒன்றில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் அவர் அப்படி செய்ததிலும் பெரிய சர்ச்சை ஒன்று வெடித்து சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த விஜய்; திமுகவை கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே கடுமையாக சாடிவருகிறார். நடக்கவிருக்கும் தேர்தல் தவெகவுக்கும், திமுகவுக்குமான போட்டி என்று பேசிக்கொண்டே இருந்தார். எனவே கண்டிப்பாக திமுகவின் முதல்கட்ட தலைகள் போட்டியிடும் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய்யும் களமிறங்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூரிலும் களம் கண்டிருக்கிறார்.

Did Vijay Wear a Knee Cap While Praying Trichy Church Visit Sparks Debate
Photo Credit:

ஏன் அப்படி?: விஜய்யின் இரண்டு தொகுதி முடிவுக்கு முக்கிய காரணமே சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவும், அவர் விஜய் மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும்தான் என்று கருதப்படுகிறது. விவாகரத்து விஷயம் வெடிக்கும் முன்பு பெண்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் விஜய்க்கென்று ஒரு தனி இமேஜ் இருந்தது. ஆனால் இந்த விஷயம் அந்த இமேஜை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டது. எனவே ஒரு தொகுதியில் நின்று தோற்றுவிட்டால் மொத்தமும் காலி; இரண்டு தொகுதிகளில் நின்றால் ஒன்று கைவிட்டாலும் இன்னொன்று கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு செயலை அவர் செய்திருக்கிறாராம்.

Also Read
விஜய்க்கு நிம்மதி.. சங்கீதா விவாகரத்து வழக்கு என்ன ஆச்சு தெரியுமா?.. இதை படிங்க முதல்ல!
விஜய்க்கு நிம்மதி.. சங்கீதா விவாகரத்து வழக்கு என்ன ஆச்சு தெரியுமா?.. இதை படிங்க முதல்ல!

பரப்புரை எல்லாம் டல்தான்: பரப்புரை ஆரம்பிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த தவெக ஆதவ் அர்ஜுனா, 'பரப்புரையில் விஜய் கிராமம் கிராமமாக செல்வார்' என்று கூறியிருந்தார். இதனால் தவெகவினர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் விஜய்யோ ஒரு நாள் பரப்புரை செய்தால் அடுத்தது குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஓய்வு எடுத்துவிடுகிறார். உண்மையில் சொல்லப்போனால் பல கிராமங்களுக்கு தவெக தரப்பிலிருந்து ஓட்டு கேட்டே செல்லவில்லை. தலைவர் சோம்பேறியாக இருப்பதால் வந்திருக்கும் வினை இது என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

மண்டியிட்ட விஜய்: இப்படியெல்லாம் அரசியல் செய்தால் கண்டிப்பாக விஜய் தேர்தலில் ஒரு சீட்டை கூட வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம். அவர் இப்போது போட்டுக்கொண்டிருக்கும் உழைப்பு 100க்கு ஒரு சதவீதம் கூட கிடையாது. நிலைமை இப்படி இருக்க நெற்று திருச்சியில் இருக்கும் புனித அந்தோணியார் தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அதை பார்த்த பலரும், பிரார்த்தனை செய்வதைவிடவும் பிரசாரம் செய்வதுதான் முக்கியம் என்பதை இவருக்கு யாராவது புரிய வையுங்களேன் என்று கிண்டலடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி இது பவன் கல்யாண் செய்த ஸ்க்ரிப்ட். அதை அப்படியே இங்கே ஃபாலோ செய்கிறார் என்றும் கேலிகள் உருவாகிவிட்டன.

கிளம்பிய விவாதம்: இந்நிலையில் விஜய் எதை செய்தாலும் விவாதமாவது சமீபத்தில் வழக்கமாகியிருக்கிறது. இந்நிலையில் நேற்று அவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததும் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது அவர் முட்டிக்கு பாதுகாப்பு கவசத்தை (Knee Cap) அணிந்துகொண்டுதான் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ததாக சிலர் கூறுகிறார்கள். அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன், " அன்பர் ஒருவர் பகிர்ந்திருந்த படம் இது. சிந்திக்கிறக் கூட்டம் ஒருபுறம்; அறிவுக்குருட்டுக் கூட்டம் மறுபுறம். அதுதான் இந்தத் தேர்தல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X