விஜய்யின் கோட் பட காப்பியா டாக்ஸிக்?.. கீது மோகன்தாஸ் டயலாக்கை கூட விடலயே.. என்ன ஆகப்போகுதோ?
சென்னை: கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. துரந்தர் படத்துக்கும் விஸ்வரூபம் படத்துக்கும் இடையேயான ஏகப்பட்ட கம்பேரிசன்களை காண முடிந்தது. இந்நிலையில், இன்று வெளியான டாக்ஸிக் டீசரை பார்த்த ரசிகர்கள் இதென்ன விஜய்யின் கோட் பட காப்பியா என கலாய்த்து வருகின்றனர்.
கேஜிஎஃப் 2ம் பாகம் 2022ம் ஆண்டு வெளியாகி 1000 கோடி வசூலை ஈட்டியது. அதன் பின்னர், கேஜிஎஃப் 3 உருவாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நடிகர் யஷ் டாக்ஸிக் படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். சுமார் 4 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அடுத்த மாதம் அதற்கான பலன் கிடைக்கப் போகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ராமாயணம் படத்திலும் ராவணனாக யஷ் நடித்துள்ளார் என்பதால் இந்த ஆண்டு யஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும்.
டாக்ஸிக் டீசர் மிரட்டுது: யஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான க்ளிம்ப்ஸ் படு ஆபாசமாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், துரந்தர் படத்தையும் லோகேஷ் கனகராஜ் படங்களையும் மலையாளத்தில் வெளியான மார்கோ படத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிளட் பாத்தாக டாக்ஸிக் டீசர் இன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ருக்மணி வசந்த் உடன் அந்த மாதிரி சீன்?: டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ருக்மணி வசந்த் உடன் கசமுசா காட்சியில் யஷ் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட லாங் ஷாட் டார்க் சீனை ஜூம் செய்து டீகோட் செய்து வருகின்றனர். படம் வெளியானால் தான் அதன் உண்மை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் பட காப்பியா?: டாக்ஸிக் திரைப்படம் என்ன மாதிரியான கதை என குழம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டீசரின் இறுதியில் இளம் வயது டீ ஏஜிங் யஷ் வருவதை பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபு சுட்ட தோசையை மறுபடியும் கீது மோகன்தாஸ் சுட்டு விட்டாரா என்றும் கோட் படத்தின் காப்பி தான் இந்த படமா? என்றும் கலாய்த்து வருகின்றனர்.
கோட் வசனமே இருக்கு: மேலும், கோட் படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சியில், "It's Over, When I Say It's Over" என்கிற வசனத்தை விஜய் பேசியிருப்பார். அதே வசனம் இன்று வெளியான டாக்ஸிக் படத்தின் டீசரிலும் இருப்பதை பார்த்த தளபதி ரசிகர்கள் அப்படியே காப்பி அடிச்சிட்டாங்களே என கலாய்த்து வருகின்றனர். சில்வஸ்டர் ஸ்டாலன் நடித்த ராம்போ ஃபர்ஸ்ட் பிளட் 2ம் பாகத்தில் அதிகாரி ஒருவர் It's Over என சொல்ல, Nothing is Over என சில்வஸ்டர் ஸ்டாலன் பேசிய வசனம் உலகளவில் டிரெண்டானது. கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் "It's Over, When I Say It's Over" எனும் ஆல்பம் பாடலும் உருவானது குறிப்பிடத்தக்கது. பவர்ஃபுல்லான நபர்கள் பேசும் வார்த்தையாக இது அமைந்திருக்கும் நிலையில், யஷ்ஷுக்கு கச்சிதமாகவே பொருந்துகிறது.


Click it and Unblock the Notifications











