twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை கடத்தப்பட்ட வழக்கு... போலீசாரை கொல்ல திலீப் திட்டமிட்டார்... குற்றப்பிரிவு போலீஸார் வாதம்!

    |

    கொச்சி : நடிகை தாக்கப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட புதிய வழக்கில் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனுவை காவல்துறையினர் எதிர்த்துள்ளனர்.

    மாநில வரலாற்றிலேயே முதல்முறையாக சதிக்குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர், விசாரணை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது இதுவே முதல்முறை, எனவே திலீப்பை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்

    நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... நடிகர் திலீப் வீட்டில் அதிரடி ரெய்டு!நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... நடிகர் திலீப் வீட்டில் அதிரடி ரெய்டு!

    பெரும் அதிர்வலைகள்

    பெரும் அதிர்வலைகள்

    தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை செய்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப்பிடம் வீடியோ

    திலீப்பிடம் வீடியோ

    கைது செய்யப்பட்ட திலீப் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். நடிகர் திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திரகுமார் புதிய குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில், நடிகை மானபங்க வீடியோவை திலீப் வி.ஐ.பிக்களுக்கு போட்டு காட்டியதாக கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோ திலீப் வசம் இருப்பதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார்.

    அதிரடி ரெய்டு

    அதிரடி ரெய்டு

    இயக்குனர் அளித்த புகாரின் பேரில் 20 பேர் கொண்ட போலீசார், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு நடந்து வருகிறார்கள். கடந்த வாரம், திலீப் மற்றும் அவரது ஆட்கள் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அவர்களுக்கு எதிராக புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு இடையூறு செய்கிறார்

    விசாரணைக்கு இடையூறு செய்கிறார்

    இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று எண்ணிய நடிகர் திலீப் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த வழக்கில், விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் திலீப்குமார் சதி செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு இடையூறு செய்ய திலீப் அடிக்கடி முயற்சி செய்து வருகிறார். இந்த வழக்கில் 20 சாட்சிகளையும் மாற்ற திலீப் தூண்டியுள்ள என்று அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

    திலீப் முதல் குற்றவாளி

    திலீப் முதல் குற்றவாளி

    மேலும் இந்த வழக்கில் திலீப்பை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அவரது குரல் மாதிரிகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். விசாரணைக் குழு இதுவரை பல ஆதாரங்களை சேகரித்துள்ளது. திலீப் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் இருந்து செல்போன் உள்ளிட்ட 19 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் திலீப் சட்டத்திலிருந்து தப்பிக்க பல முயற்சிகளை செய்துள்ளார் என்று அரசு நிதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    திலீப் உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணை அதிகாரிகளை மிரட்டிய புதிய வழக்கில் திலீப், அவரது சகோதரர் பி.சிவக்குமார், அனூப், திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செமாங்கநாடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Read more about: dileep திலீப்
    English summary
    the state government has opposed actor Dileep’s anticipatory bail plea before the High Court in the new case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X