சிவாஜிக்கு பிறகும் மோகன்தான்.. வேறு யாரும் இல்லை.. பாக்யராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: மைக் மோகன் என்று ரசிகர்களாள் அழைக்கப்படுபவர் மோகன். வெள்ளி விழா நாயகன் என்றும் இவரை ரசிகர்கள் அழைப்பார்கள். முக்கியமாக மோகனின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருப்பவை. அந்தப் பாடல்களுக்கு நடனமே பெரிதாக ஆடாமல் தனது முக பாவனைகளால் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் வல்லமை உடையவரும் அவர். மோகன் இப்போது GOAT படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையி பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோகன் திடீரென்று காணாமல் போனார்.

Director Bhagyaraj Open Talks about Actor Mic Mohan Here are the details

GOAT: தற்போது பல வருடங்களுக்கு பிறகு தரமான கம்பேக் கொடுக்கவிருக்கிறார் மோகன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்தில்தான் மோகன் நடிக்கிறார். முக்கியமாக அதில் அவர் வில்லனாக கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லன் இல்லை என்றும்; அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த மோகன் தனது கம்பேக்கை எப்படி கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஹீரோ மோகன்: இதற்கிடையே மோகன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஹாரா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படமானது ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோகனுக்கு இப்போது 68 வயது ஆகிறது. இருந்தாலும் செம கான்ஃபிடென்ஸோடு ஹீரோவாக அவர் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க மோகன் நேற்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாக்யராஜ் பேசுகையில், "மோகனை பற்றி பேசும்போது கண்டிப்பாக அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பற்றியும் பேசியே ஆக வேண்டும். சிவாஜிக்கு பிறகு பாடலிலும் சிறந்து நடிக்கக்கூடிய நடிகராக மோகன் தான் திகழ்ந்துகொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்து வேறு யாரும் இல்லை.

அப்படியே சிவாஜிதான்: பாடல் காட்சிகளில் சிவாஜி நடிக்கும்போது ஸ்வரங்கள் ஏற்ற இறக்கம் வரும். அப்போது சிவாஜியின் நாடி, நரம்புகள் எல்லாம் வெளியே தெரியும் அளவும் அவர் பாடுவது போல் நடிப்பார். அதனை பார்க்கும்போது உண்மையிலேயே சிவாஜிதான் பாடுகிறாரோ என்று தோன்றும். அதேபோன்ற ஒரு திறமையை மோகனிடமும் பார்க்கலாம். உண்மையிலேயே மோகன்தான் பாடுகிறாரா என்கிற அளவுக்கு பாடல் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X