பாரதி இயக்கத்தில் உருவாகும் மறுமலர்ச்சி 2... நாயகனாகும் ராஜ்கிரண்!

சென்னை : நடிகர் மம்முட்டி, தேவயாணி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1998ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மறுமலர்ச்சி.

பாரதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் பாரதி எடுக்கவுள்ளார். நாயகனாக ராஜ்கிரண் ஒப்பந்தமாகியுள்ளார்.

மறுமலர்ச்சி படம்

மறுமலர்ச்சி படம்

நடிகர் மம்முட்டி, தேவயானி, ரஞ்சித் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 1998ல் வெளியான படம் மறுமலர்ச்சி. சிறப்பான வசூலை குவித்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் பாரதி. படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் தங்கர்பச்சான். மேலும் இசையமைத்திருந்தார் எஸ்ஏ ராஜ்குமார். இவரது இசையில் நன்றி சொல்ல எனக்கு என்ற பாடல் சிறப்பாக அமைந்திருந்தது. படத்தின் பின்னணியும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது 23 ஆண்டுகள் கழித்து எடுக்க இயக்குநர் பாரதி திட்டமிட்டுள்ளார்.

நாயகன் ராஜ்கிரண்

நாயகன் ராஜ்கிரண்

க்ரவுட் பண்டிங் முறையில் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி 2 படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் ராஜ்கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு படை படை படையாச்சிடா என்ற பாடலை உருவாக்கி படக்குழு வெளியிட்டது.

 கதிர்வேல் படையாச்சியார்

கதிர்வேல் படையாச்சியார்

ஆயினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை துவங்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தில் நாயகனாக நடிக்கும் ராஜ்கிரண் கதிர்வேல் படையாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

படத்தில் ரத்தம் காட்டுவது தப்பில்லை | Filter Gold Director Vijayabaskar Interview | Filmibeat Tamil
எஸ்ஏ ராஜ்குமார் இசை

எஸ்ஏ ராஜ்குமார் இசை

மேலும் படத்தில் ராஜ்கிரணின் மகனாக சோழன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கும் எஸ்ஏ ராஜ்குமார் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

மீண்டும் ஹீரோ

மீண்டும் ஹீரோ

என் ராசாவின் மனசிலே படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான பவர் பாண்டி படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X