twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பிலிமிபீட்“க்கு நன்றி சொன்ன சேரன்… காரணம் என்னனு தெரியுமா?

    |

    சென்னை : நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி, சேரன் நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

    இப்படத்தில் சேரன், கௌதம் கார்த்திக் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும் சரவணன், வெண்பா,ஷிவாத்மிகா ராஜசேகர், சிங்கம்புலி,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

    இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிலிமிபீட்டுக்கு நன்றி கூறியுள்ளார்.

    பாசத்தால் அனைவரையும் கட்டிப் போட்ட இயக்குனர் சேரன்... பாரதிராஜா கண் கலங்கிய தருணம் பாசத்தால் அனைவரையும் கட்டிப் போட்ட இயக்குனர் சேரன்... பாரதிராஜா கண் கலங்கிய தருணம்

    குறைந்துவிட்டது

    குறைந்துவிட்டது

    சமீப காலமாக குடும்ப உறவுகள் குறித்த திரைப்படங்கள் வெளிவருவது குறைத்து விட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் காதல், க்ரைம், திகில் போன்ற திரைப்படங்களை மிகவும் விரும்புவதால், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்லும் படங்கள் வெளிவருவது குறைந்து விட்டது என்று சொல்லலாம்.

    முதன்மை கதாபாத்திரம்

    முதன்மை கதாபாத்திரம்

    குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சேரன், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இப்படம் டிசம்பர் 24ந் தேதி வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் அழகாக கூறியுள்ளது.

    பாரதிராஜா பாராட்டு

    பாரதிராஜா பாராட்டு

    ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை பார்த்த இயக்குனர் பாரதி ராஜா, சேரனை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்தப் படத்தில் சேரன் ஒட்டு மொத்த கதையையும் புரிந்துகொண்டு அனைவரது உணர்வுகளையும் தாங்கிப்பிடித்து தனிமனிதனாக சுமந்துகொண்டு, கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறான். சேரன் மை சன் .லாங் லிவ் சேரன், ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் பியுட்செர் என்று உணர்ச்சி பொங்க பாராட்டி இருந்தார். இந்த செய்தியை பிலிமிபீட் வெளியிட்டு இருந்தது.

    Recommended Video

    Anandham Vilayadum Veedu | Cheran நடிக்கணுமா - இதான் கண்டிஷன் | Filmibeat Tamil
    ட்விட்டரில் நன்றி

    ட்விட்டரில் நன்றி

    இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆனந்தம் விளையாடும் வீடு படம் பார்த்து எனது கேரக்டர் பற்றி பாராட்டிய மதிப்பிற்குரிய பாரதிராஜா அப்பா அவர்களின் பேட்டியையும், மக்களின் ஆதரவையும் வைத்து ஒரு ஸ்டோரி எழுதியிருக்கும் பிலிமிபீட்டுக்கும் நன்றியும் பாராட்டும் என பதிவிட்டு இருந்தார். மேலும், எமது பிலிமி பீட் செய்தியாளர் வினோத்துக்கும் நன்றி கூறியுள்ளார்.

    English summary
    Director cheran thanks to filmibeat
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X