நான் கல்யாணம் பண்ணிக்காததுக்கு இதுதான் காரணம்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரீசன் என்னன்னு தெரியுமா?

சென்னை : இயக்குநரும் பிரபல நடிகருமான எஸ்ஜே சூர்யா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து தன்னுடைய நடிப்பிலேயே இவர் பல படங்களை கொடுத்துள்ளார்.

இதனிடையே 54 வயதாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் எஸ்ஜே சூர்யாவிற்கு திருமணம் என்று சமீபத்தில் தகவல்கள் பரவின.

சிறப்பான இயக்குநர்

சிறப்பான இயக்குநர்

வாலி, குஷி என சிறப்பான படங்களை கொடுத்துள்ளவர் எஸ்ஜே சூர்யா, அஜித் மற்றும் விஜய்க்கு இந்தப் படங்கள் சிறப்பான படங்களாக அமைந்தன. அவர்களின் கேரியர் பெஸ்டிலும் இந்தப் படங்களுக்கு இடமுண்டு. இதையடுத்து தானே ஹீரோவாக நடித்தும் சில படங்களை இயக்கி வெற்றிப் பெற்றார் எஸ்ஜே சூர்யா.

நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா

நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா

தொடர்ந்து இயக்கத்தில் கலக்கிவந்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி, தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். சிறப்பான திரைக்கதையால் படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்த எஸ்ஜே சூர்யா தற்போது தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இவரது சமீபத்திய படங்கள் மாநாடு, டான் போன்றவை மிகச்சிறந்த விமர்சனங்களை இவருக்கு பெற்றுத் தந்தன. முன்னதாக இறைவி, மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.

திருமணம் குறித்த விளக்கம்

திருமணம் குறித்த விளக்கம்

தான் பெரிய அளவிலான சரிவுகளை சந்தித்த நிலையில் தனக்கு திருமணம் நடந்திருந்தால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் அது பாதித்திருக்கும் என்றும் இதன் காரணமாகவே தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தான் சிங்கிளாக இருந்தால் தான் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமிட்மெண்ட் குறித்த யோசனை

கமிட்மெண்ட் குறித்த யோசனை

தன்னுடைய சரிவின்போது தான் சிங்கிளாக இருந்தால் ஒரு ஹோட்டலில் சென்று வேலை செய்ய முடியும், திடீரென சென்று நடிக்க முடியும், அமிதாப்பிடம் சென்று அடுத்த படத்திற்கான கால்ஷீட் கேட்க முடியும் எதை வேண்டுமானாலும் திட்டமிடாமல் செய்ய முடியும். ஆனால் திருமணம் நடந்தால் தன்னுடைய குடும்பத்தினர் குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X