விஜய் வேற ட்ராக்ல போயிட்டார்.. அவரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.. இயக்குநர் ஹரி ஓபன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அநேகமாக அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் பலரிடமும் இப்போது இருக்கிறது. இந்தச் சூழலில் விஜய் குறித்து இயக்குநர் ஹரி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT (Greatest Of All Time)படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

Director Hari Open Talks about Actor Vijay Here are the details

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் நடந்த ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. முக்கியமாக யுவன் விஜய்க்கு தரமான சம்பவம் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள்; பாடலை கேட்டதும் கொஞ்சம் அப்செட் ஆகத்தான் செய்தார்கள். இருந்தாலும் மற்ற பாடல்கள் கண்டிப்பாக க்ளிக் ஆகும் என்றும் ஆவலோடு இருக்கிறார்கள் அவர்கள்.

தளபதி 69: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருப்பதாலும்; 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாலும் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. ஒருவேளை வினோத் - விஜய் கூட்டணி அமைந்தால் செமயாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

ஹரி பேட்டி: இந்நிலையில் இயக்குநர் ஹரி சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரி, "விஜய் இப்போது வேறு ட்ராக்கில் சென்றுவிட்டார். இனி அவரை தொந்தரவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்" என்று குறிப்பிட்டார். விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதால் இனி ஹரி - விஜய் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரத்னம்: முன்னதாக விஷாலை வைத்து ஹரி ரத்னம் என்ற படத்தை இப்போது இயக்கியிருக்கிறார். படமானது இன்று ரிலீஸானது. கடந்த சில படங்களாகவே ஹரி ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். எனவே இந்தப் படம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. படத்தை இன்று பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே இதுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X