நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு புதுமை இருக்கும். இதன் காரணமாகவே அவரை எல்லோரும் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் குறித்து இயக்குநர் ஹரி பேசியிருக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கமல் ஹாசன் என்ற பெயரை இந்திய சினிமாவின் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது. சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாடக்கூடியவர். சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர். அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம்தான். இருந்தாலும் பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறாரே என்று பலரும் கமல் ஹாசனை பார்த்து ஆச்சரியம்தான் படுவார்கள்.

Director Hari Open Talks About Kamal Haasan At Latest Interview

அரசியல் என்ட்ரி: 233 படங்களில் நடித்திருக்கும் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதனை புரிந்துகொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்த மெகா ஹிட் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே புத்துணர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு வந்த தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் ஹிட்டடிக்காமல் வேற்று மொழி படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்தடுத்த படங்கள்: விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் கல்கி படத்திலும் நடித்துவருகிறார். இவை தவிர்த்து எஸ்டிஆர் 48, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்படி ஆண்டவர் கமல் ஹாசன் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஹரி பேட்டி: இந்தச் சூழலில் பிரபல இயக்குநர் ஹரி கமல் ஹாசன் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய ஹரி, "விக்ரம் படம் ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. அந்த சமயத்தில்தான் நான் இயக்கிய யானை படம் வெளியாவதாக இருந்தது. பிறகு விக்ரம் ரிலீஸாகி ஒரு மாதம் கழித்து யானை ரிலீஸானது. அப்போது கமல் ஹாசனை சந்திக்க நானும் அருண் விஜய்யும் சென்றிருந்தோம். அந்த சமயத்தில் விக்ரம் படம் பற்றி கமலிடம் அருண் விஜய் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

பார்க்கமாட்டீங்க: அப்போது என்னைப் பார்த்து அவர், நீங்கள் விக்ரம் படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டார். ஆனால் நான் தயக்கத்தோடு, 'யானை பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் இன்னும் படம் பார்க்கவில்லை' என்று கூறினேன். உடனே அவர், நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்கமாட்டீங்க என எனக்கு தெரியும். யானை பட வேலைகளில் பிஸியாக இருக்கும் நீங்கள் விக்ரம் படம் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார். அவர் ஒருவரை பார்த்தவுடன் அடுத்தவரின் சூழ்நிலையை புரிந்துகொள்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X