நானும், சூர்யாவும் நண்பர்கள்தான்.. எங்களுக்குள் ஒன்றும் இல்லை.. ஹரி ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலேயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து ஹரி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஹரி. இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக அதில் இடம்பெற்றிருந்த சண்டை காட்சிகளும், காமெடி காட்சிகளும் கோலிவுட்டுக்கு பக்காவான கமர்ஷியல் இயக்குநர் கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தின.

Director Hari Open Talks about Suriya And Singam 4 Movie Update

ஹரியின் சாமி: ஒரு இயக்குநருக்கு முதல் படத்தைவிடவும் இரண்டாவது படம் ரொம்பவே முக்கியம். அந்தவகையில் ஹரி தனது இரண்டாவது படமாக விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தை இன்று பார்த்தாலும் 90ஸ் கிட்ஸ் அனைவரும் தங்களை மறந்துவிடுவார்கள். பரபர ஆக்‌ஷன், எமோஷன், காதல் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அந்தப் படம் அமைந்திருந்தது. முக்கியமாக படத்தின் வசனமும், விக்ரமின் நடிப்பும் பட்டையை கிளப்பின.

முன்னணி இயக்குநர்: சாமி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஹரி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறினார். சாமி படத்துக்கு பிறகு அவர் இயக்கிய கோவில் படம் ஃபீல் குட் படமாக இருந்தது. அதனைப் பார்த்த அனைவருமே அட சாமி படத்தை இயக்கிய ஹரியா இதற்கு இயக்குநர் என்று ஆச்சரியம்தான் பட்டனர். அதிலும் சிம்புவை வேறு ஃப்ளேவரில் காண்பித்து அதகளம் செய்திருந்தார் ஹரி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தாமிரபரணி, வேல் படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

சிங்கம் சூர்யா: ஹரிக்கு இன்னொரு சாமி என்றால் அது சிங்கம் படம். சூர்யாவின் 25ஆவது படமாக வெளியான சிங்கம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல்தான் சிங்கம் 2 படமும். அந்தப் படத்தின் பரபர திரைக்கதை ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டது. ஆனால் சிங்கம் 2தான் ஹரிக்கு கடைசி ஹிட் படமும்கூட. அதற்கு பிறகு அவர் இயக்கிய பூஜை, சிங்கம் 3, சாமி 2, யானை படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாக அவர் தன்னை மீண்டும் நிரூபிக்கும் வேட்கையில் இருக்கிறார். ரத்னம் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அவருக்கு நல்ல கம்பேக்காக அமைந்திருக்கிறது.

ஹரி பேட்டி: இதற்கிடையே சூர்யாவை வைத்து ஹரி, வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை கொடுத்திருக்கிறார். இவற்றில் சிங்கம் 3ஐ தவிர்த்து மற்ற படங்கள் ஹிட். இதன் காரணமாக சூர்யா - ஹரி கோலிவுட்டின் ஃபேவரைட் காம்போவாக மாறியது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே இருவரும் இணையவில்லை. இந்நிலையில் சூர்யா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய ஹரி, “சூர்யாவுக்கும் எனக்கு பிரச்னை எல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான்.

சிங்கம் 4க்கு நோ: சிங்கம் படத்தின் நான்காம் பாகம் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை நானும் சூர்யாவும் இணைந்தால் வேறொரு படமாகத்தான் அது இருக்கும். சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு இடையே ஒரு தொடர்ச்சி இருக்கும். ஆனால் சிங்கம் 4 படம் எடுத்தால் அந்த கேரக்டர்ஸுக்கும், கதைக்கும் தொடர்ச்சி இருக்காது. அதையும் மீறி சிங்கம் 4 படத்தை எடுத்தால் சரியாக இருக்காது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X