அஜித்துக்கு நடிக்கவே ஆசையில்லை.. ரேஸ் மீதுதான் ஆர்வம்.. இயக்குநர் போட்டுடைத்த சீக்ரெட்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. ஆனால் அதற்கு பிறகு எந்த விதமான அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகவில்லை. நிலைமை இப்படி இருக்க விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்தும், ஆரவ்வும் கார் விபத்துக்குள்ளான வீடியோக்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்தச் சூழலில் அஜித் பற்றி லிங்குசாமி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேறியதை அடுத்து மகிழ் திருமேனி இயக்க கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அஜிதுடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோ நடிக்க ஒப்பந்தமாகினர். படத்தின் பெயர் கடந்த வருடம் மே மாதம் அறிவிக்கப்பட்டது.

முதல் ஷெட்யூல்: அதற்கு பிறகு படத்திலிருந்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால் அஜர்பைஜானில் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கியது. மும்முரமாக நடந்த ஷூட்டிங்கில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா என அனைவருமே கலந்துகொண்டனர். அந்த ஷெட்யூல் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அது ஏகே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
அவ்வளவுதானா?: முதல் ஷெட்யூல் முடித்து சென்னை திரும்பிய அஜித் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு ஆரவ்வை அழைத்துக்கொண்டு பைக் டூர் சென்றிருக்கிறார். அஜித் பைக் டூர் செல்வது ஒருபக்கம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் விடாமுயற்சியை விட்டுவிட்டாரோ என்று சோகத்துடன் கேள்விகளை எழுப்பிவந்தனர். மேலும் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதால் விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்துவிட்டதாகவும் ஒரு பரபரப்பான தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
வெளியான வீடியோ: சூழல் இப்படி இருக்க அஜர்பைஜானில் நடந்த விடாமுயற்சி ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட கார் சேசிங் காட்சியில் அஜித்துக்கும், ஆரவ்வுக்கும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுதொடர்பான வீடியோவை சுரேஷ் சந்திரா சமீபத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த ஏகே ரசிகர்கள், அஜித் இப்படி ரிஸ்க் எடுக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்தனர். அதேசமயம் அஜித்துக்கு இதே வேலையா ஒழுங்கான அப்டேட் கொடுங்கள் என்றால் எப்போ பார்த்தாலும் ஆக்சிடெண்ட் அப்டேட்டையே கொடுக்கிறாரே என்று காட்டமுடன் ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர்.
லிங்குசாமி பேட்டி: இந்நிலையில் அஜித்தை வைத்து ஜி படத்தை இயக்கிய லிங்குசாமி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் ஜி படத்தை எடுக்கும்போது அஜித்துக்கு அந்த நேரத்தில் படத்தில் நடிக்கவே ஆசை இல்லை. எனாது படம் மட்டுமில்லாமல் வேறு எந்த படத்திலும் நடிக்கவும் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. அவருக்கு முழுக்க முழுக்க அப்போது கார் ரேஸ் மீதுதான் ஆர்வம் இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











