இதுக்கப்புறம் அவ்வளவுதான்.. அமரன் ரிலீஸ்.. சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த இயக்குநர்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த மாவீரன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த அவர்; இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படமானது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சில படங்கள் மட்டுமே இருப்பார்; பிறகு காணாமல் போய்விடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் ஆரூடம் கூறியவர்களை ஆஃப் செய்யும் விதமாக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு படத்துக்கு படம் உச்சம் சென்றார். அதன் காரணமாக இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவது, பாடுவது என்று வேறு ஜானரிலும் பிஸியாக இருக்கிறார்.

sivakarthikeyan amaran mohan g

வரிசையாக ஹிட்: சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த நான்கு படங்களில் பிரின்ஸ் படம் மட்டும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அயலான் திரைப்படம் லேட்டாக ரிலீஸானாலும் சிவாவுக்கு வெற்றியை கொடுத்தது. முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி அயலான் பந்தயம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவாவின் மவுசு மேலும் உயர்ந்தது.

அமரன்: மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் தனது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படமானது முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படம் நாளை மறுநாள் வெளியாகிறது.

GOAT கேமியோ: இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் இருக்கும் நட்பின் காரணமாக GOAT படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோல் செய்திருந்தார் சிவா. அதில் அவரிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா. க்ரவுண்ட்ல இருக்குற உயிர்கள் உங்களோட பொறுப்பு என்று விஜய் சொல்வதும்; அதற்கு, நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்க; அதை நீங்க பார்த்துக்கோங்க; இதை நான் பார்த்துக்குறேன் என்று சிவா சொல்வதுமாக வசனங்கள் வந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைத்துவிட்டார் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது.

sivakarthikeyan amaran mohan g

விமர்சித்த மோகன் ஜி: சிவாதான் அடுத்த விஜய் என்று பேச்சு எழுந்திருக்கும் சூழலில்; அதெல்லாம் எதுவும் இல்லை ஒரு தளபதிதான் என்று ஒரு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தியிருந்தார் எஸ்.கே. இந்நிலையில் திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி சிவகார்த்திகேயனை கிண்டல் செய்திருக்கிறார். அதாவது அமரன் படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, 'டிக்கெட் பிரஷரே இல்லை. தல, தளபதி படங்கள் வந்தால்தான் தியேட்டருக்கு தீபாவளி. இனி அது அவ்வளவுதான் போல’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X