நயன்தாரா பட இயக்குனரின் தந்தை மரணம்: முதல் ஆளாக சிம்பு அஞ்சலி
Recommended Video

சென்னை: கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனின் தந்தை காலமானார். அவரின் உடலுக்கு முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் சிம்பு.
சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை துவங்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். அந்த படம் பாதியில் நிற்கவே புதுப்படம் எதுவும் துவங்காமல் இருந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு நயன்தாரா வாய்ப்பளித்தார். நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் ஹிட்டானது. யார் அந்த நெல்சன் என்று அனைவரையும் பேச வைத்தது.
நெல்சனின் தந்தை நேற்று இரவு சென்னையில் காலமானார். அவரின் மரண செய்தி அறிந்த சிம்பு உடனே நெல்சனின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அவரின் நண்பர் மகத் ராகவேந்திராவும் சென்றிருந்தார். அவர்கள் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











