இணையத்தில் லீக்கான ஜனநாயகன்.. பார்த்த உதவி இயக்குநர்.. பி.வாசு திட்டி தீர்த்துட்டாராம்.. என்ன நடந்தது?

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. அந்த சமூக விரோத செயலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டாலும்; இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது அனைத்து மொழி திரைத்துறையினருக்குமே ஒரு எச்சரிக்கை மணிதான் என்பதை சொல்லியே ஆக வேண்டும். இந்நிலையில் கோலிவுட்டின் சீனியர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு ஜனநாயகன் லீக் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தது. முதலில் ரிலீஸ் தேதியில் மாற்றம், பிறகு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்தது, நீதிமன்றமும் கைவிரித்தது, மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோதும் அதிகாரிகள் பார்க்காமல் இழுத்தடிப்பது என நீண்டுகொண்டே சென்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் பேரதிர்ச்சியான விஷயம் ஒன்று நடந்தது.

Director P Vasu Reacts to Vijay s Jana nayagan Leak Controversy
Photo Credit:

என்ன நடந்தது?: அதாவது மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட படம்; அதிகாரிகளால் பார்க்கப்பட்டு சான்றிதழையும் பெறவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் சில மாதங்களுக்கு முன்பு முழு திரைபடமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. அதை பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையும் ஆடிப்போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சென்சாரில் இருக்கும் படம் எப்படி லீக்கானது என்ற அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். அத்தனை பேருமே இதில் படக்குழுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தார்கள்.

Also Read
விஜய் கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கீங்க.. அஜித்தை அப்படி பார்த்ததுண்டா?.. ஏகே செம ப்ளேயர் ப்பா
விஜய் கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கீங்க.. அஜித்தை அப்படி பார்த்ததுண்டா?.. ஏகே செம ப்ளேயர் ப்பா

கைது செய்யப்பட்டார்கள்: லீக்கான காப்பியில் எடிட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால்; கண்டிப்பாக எடிட்டர் மூலம்தான் கசிந்திருக்க வேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். ஆனால் அதனை தென்னிந்திய எடிட்டர்கள் சங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதேசமயம் எடிட்டர் தன்னிடம் வேலைக்கு வைத்த ஒரு ஃப்ரீலான்சர் மூலம்தான் லீக்கானது உறுதியானது. எனவே சங்கத்திலிருந்து தொகுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும் லீக் செய்த பலரை கைதும் செய்துவிட்டார்கள்.

எப்போது ரிலீஸ்?: இப்போது விஜய் முதலமைச்சராகவும் பதவியேற்றுவிட்டார். எனவே இனிமேல் படத்தின் ரிலீஸுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதப்படுகிறது. கூடிய விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும்; எப்போது வேண்டுமானாலும் படத்தின் ரிலீஸ் தேதியை சொல்வோம் என்று தயாரிப்பாளரும் நேற்று திருச்செந்தூரில் கூறினார். இந்நிலையில் சீனியர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு ஜனநாயகன் படம் லீக்கானது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

பி.வாசு பேட்டி: நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமாருக்கு அவர் கொடுத்த பேட்டியில், "படத்தை லீக் செய்தவர் முதலில் தான் மட்டுமே பார்க்க வேண்டும் என்று எடுத்திருக்கிறார். பார்த்ததோடு மட்டுமின்றி அவரது நண்பர்களுக்கு ஷேர் செய்திருக்கிறார். அது அப்படியே வெளியே பரவிவிட்டது. ரொம்பவே லூசாக ஒரு ஆளை உள்ளே விட்டுவிட்டார்கள். எனது உதவி இயக்குநர் என்னிடம் வந்து, 'ஜனநாயகன் படத்தின் முதல் பாதி பார்த்துவிட்டேன். இரண்டாவது பாதியை பார்க்க வேண்டும்' என கூறினார். உடனே நான் அவரிடம்,'நீ இனிமேல் என்னிடம் பேசாதே. உன் வீட்டிலேயே நீ திருடிவியா' என கேட்டேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X