வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் சிவகார்த்திகேயன் இல்லை.. இயக்குநர் பொன்ராம் அதிரடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ உள்ளிட்ட படங்களின் 2ம் பாகத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 தொடர்பான அறிவிப்பை இயக்குநர் பொன்ராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெரினா, எதிர்நீச்சல் என ஹீரோவாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.

ஹாட்ரிக் ஹிட்

ஹாட்ரிக் ஹிட்

மெரினா, 3, மனங்கொத்தி பறவை என நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2013ம் ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என மூன்று படங்களுமே அடுத்தடுத்து ஹிட் அடிக்க கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அந்த படத்தின் பாடல்கள் மற்றும் சூரியுடன் அவர் இணைந்து செய்த கலாட்டா காமெடிகள், சத்யராஜின் சைலன்ஸ் காமெடி போர்ஷன் என எல்லாமே தரமான செய்கை தான்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டான நிலையில், மீண்டும் இயக்குநர் பொன்ராம் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்க வெற்றிக் கூட்டணியாகவே இவர்கள் கூட்டணி பார்க்கப்பட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு அதில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கும் மிகப்பெரிய இடம் தென்னிந்திய திரையுலகில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சறுக்கிய சீமராஜா

சறுக்கிய சீமராஜா

வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குநர் பொன்ராம் உடன் இணைந்து நடித்த சீமராஜா படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தார். சீமராஜா படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இரு ஹீரோயின்கள் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்தனர். மன்னர்கால போர்ஷன்கள் எல்லாம் பெரிதளவில் கை கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

உடைந்த கூட்டணி

உடைந்த கூட்டணி

சீமராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி அப்படியே உடைந்து போய் விட்டது. சசிகுமாரை வைத்து பொன்ராம் இயக்கிய எம்ஜிஆர் மகன் விரைவில் ரிலீசாக காத்திருக்கிறது. அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்தும் ஒரு படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.

பார்ட் 2 கன்ஃபார்ம்

பார்ட் 2 கன்ஃபார்ம்

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வரப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை இயக்குநர் பொன்ராம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கும் பொன்ராம் விளக்கம் அளித்துள்ளார்.

மெச்சூரிட்டி ஆகிவிட்டார்

மெச்சூரிட்டி ஆகிவிட்டார்

இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகை செய்தி ஒன்றை ஷேர் செய்து, "#VaruthapadathaValiparSangampart2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம்..போட்றா வெடிய.. #vvs2" என பதிவிட்டுள்ளார்.

கவினை போடுங்க

சிவகார்த்திகேயனை தவிர வேறு யாரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தில் நடிக்கக் கூடாது என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சில ரசிகர்கள், வளர்ந்து வரும் ஹீரோன்னா கவினை போடுங்க, லிப்ட் படத்தில் மிரட்டிட்டாரு.. சிவகார்த்திகேயன் போல அவரும் கலக்குவாரு என கவின் பெயரை ரசிகர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். சீக்கிரமே வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2வுக்கான பூஜையையும் பொன்ராம் போட்டுவிடுவார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X