Ajith - ஹலோ அஜித் முதலில் நல்ல மனுஷனா இருங்க.. வெளுத்து வாங்கிய இயக்குநர்.. ரொம்ப கோபமாகிட்டாரே

சென்னை: நடிகர் அஜித் தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதில் தெளிவாக இருப்பவர். இதனால் அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கோ அல்லது படத்தின் ப்ரோமோஷனுக்கோ கலந்துகொள்வதில்லை. அதேசமயம் திரைத்துறையை சேர்ந்தவர்கள் இறப்புக்கும் அவர் பெரும்பாலும் வருவதில்லை. அண்மையில் விஜயகாந்த் உயிரிழந்ததற்கு கூட நேரிலும் வரவில்லை இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிடவில்லை.

அஜித்குமார் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் காரணமாக அந்த வெற்றி கொடுத்த வைபை விடாமுயற்சியிலும் விட்டுவிடக்கூடாது என்று அஜித்தும், அவரது ரசிகர்களும் இருக்கின்றனர்.

Director Praveen Gandhi Slams Ajithkumar For Vijayakanth

அஜர்பைஜானில் ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதனால் வலிமை இழந்து காணப்பட்டனர் அஜித் ரசிகர்கள். சூழல் இப்படி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கின் மும்முரமாக நடந்துவருகிறது. அது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதேசமயம் ஷூட்டிங் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லையே என்று கவலையடைந்தனர். இப்படிப்பட்ட சூழலில் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

அஜித் எடுத்த பிரேக்: இதற்கிடையே படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு ஷெட்யூல்கள் முடிவடைந்திருக்கின்றன. இதில் அஜித்குமார் கலந்துகொண்டு நடித்து பிறகு குட்டி பிரேக் ஒன்றை எடுத்துக்கொண்டார். அந்த பிரேக்கில் தனது குடும்பத்தாருடன் முழுக்க முழுக்க நேரத்தை செலவிட்டார். அந்த சமயத்தில்தான் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். எனவே அந்த பிரேக்கில் ஓரிரு நாட்கள் ஒதுக்கி அஜித்குமார் விஜயகாந்த் இறப்புக்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டான்ஸ் அஜித்: ஆனால் அவர் வரவில்லை. முதலில் அவர் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. பிறகு துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து அவருக்கு எதிராக சிலர் கருத்து கூற ஆரம்பித்தனர். சக கலைஞர் இறப்புக்குக்கூடவா அவரால் வர முடியாது. சரி நேரில் வர வேண்டாம் இரங்கல் தெரிவித்தாவது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கலாமே என்றனர். ஆனால் அஜித் தொலைபேசி மூலம் விஜயகாந்த்தின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பிரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில் ஜோடி, ரட்சகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி அஜித் பற்றி சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "அஜித்துடன் நான் 6 மாதங்கள்வரை பயணத்திருக்கிறேன். உண்மையிலேயே அவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் என்னதான் பிஸியாக இருந்தாலும் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வராத அஜித்தை நான் கடுமையாக விமர்சிக்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருங்கள். முத்லில் நல்ல மனிதராக இருங்கள்.

விஜயகாந்த் கற்றுக்கொடுத்தது: அதைத்தான் விஜயகாந்த் கற்றுக்கொடுத்து சென்றிருக்கிறார். அஜித்தை நான் இப்படி விமர்சிப்பதால் அவருடைய ரசிகர்கள் என்னை திட்டத்தான் செய்வார்கள். பரவாயில்லை. மேலும் அஜித்துடன் இணைந்து ஒரு படம் செய்ய வாய்ப்பு கிடைக்காமல்கூட போகலாம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பே அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்தவன் நான். அதனால் எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. இதற்காக உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது. அஜித் கண்டிப்பாக ஒருநாள் விஜயகாந்த் சமாதிக்கு வந்து விஜயகாந்த்தையும், அவரது ரசிகர்களையும் சமாதானப்படுத்த வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X