பிரபாஸ் ஒரு சோம்பேறி.. அதான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. ராஜமௌலி ஓபன் டாக்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநர் ராஜமௌலி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

Prabhas Rajamouli Kalki

மொக்கை வாங்கிய ஆதி புருஷ்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்தது. ஆதிபுருஷை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ். சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி: இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

நட்சத்திர பட்டாளம்: இப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகியிருக்கிறது. நாக் அஸ்வின் படத்தை இயக்க; பிரபாஸுடன் கமல் ஹாசன், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சான், திஷா பதானி என பலர் நடித்திருக்கின்றனர். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

ராஜமௌலி பேட்டி: இந்நிலையில் ராஜமௌலி பிரபாஸ் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார். அந்த பேட்டியில் பேசிய அவர்,"பிரபாஸ் மிகப்பெரிய சோம்பேறி. அதனால்தான் திருமணம் செய்துகொள்வதிலும் சோம்பேறித்தனம் காட்டிவருகிறார். ஒரு பெண்ணை தேடி பிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு பெரிய வேலையாக இருக்கிறது. அதனால்தான் அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்" என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X