இது எந்த ஹாலிவுட் படத்தின் கதை பாஸ்.. இயக்குநரை அலறவிட்ட விஜய்.. செம ரகளை

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் விஜய் குறித்து இயக்குநர் ரவி மரியா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Director Ravi Maria Shares about Unknown Side From Vijay

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கமாட்டார்; ஹெச்.வினோத் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

ரவி மரியா பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா விஜய் குறித்து பேசுகையில், “ஒருமுறை விஜய்யை சந்தித்து கதை கூற சென்றேன். அப்போது அவர், நான் 4 வருடங்களுக்கு பிஸி என்ன செய்யலாம் என்று கேட்டார். அதற்கு நானோ; இல்லை சார் நீங்கள் கதையை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள் போதும் என்று சொல்ல; அவரும் கதையை கேட்டார்.


முழு கதையை கேட்டு முடித்தவுடன், இது எந்த ஹாலிவுட் படத்தின் கதை என்றார். நான் அதிர்ந்துபோய், சார் இது என்னோட சொந்தக் கதை சார் என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, நான் சும்மாதான் சொன்னேன். கதை ரொம்பவே அருமையாக இருக்கிறது என்று கூறினார்” என ரவி மரியா தெரிவித்தார் அந்தப் பேட்டியில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X