மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல.. கமல் - ஸ்ரீவித்யா காதல் பற்றி சந்தான பாரதி ஓபன்
சென்னை: நடிகை ஸ்ரீவித்யா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற அவர் கமல் ஹாசனை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் கைகூடவில்லை. இதனையடுத்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை சரியாக இல்லை. ஒருகட்டத்தில் புற்றுநோய் வந்து உயிரிழந்துவிட்டார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் - ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக நடிப்பில் சிறந்தவர் என புகழப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.

இயக்கத்திலும் புதுமை: கெட்டப்புகளை மாற்றுவது, ஹீரோ என்ற இமேஜை உடைத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது என கமல் நடிப்பில் மட்டும் புதுமை செய்யவில்லை. அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படமும் இன்றுவரை க்ளாஸிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் மட்டும் கில்லி இல்லை: கமல் ஹாசன் நடிப்பு, இயக்கம் என சினிமாவில் மட்டும் தனித்து தெரிபவர் இல்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதுமே தனித்துவமாக இருப்பவர். தீவிர கடவுள் மறுப்பாளரான அவர் மிகத்தீவிரமான வாசிப்பாளரும்கூட. அதேபோல் தனது கருத்தையும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக கூறுவார். தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
காதல் வாழ்க்கை: அதுமட்டுமின்றி பல நடிகைகளை காதலித்ததாக கூறப்படும் கமல் ஹாசன், சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார். அவரது இந்த வாழ்க்கை பலரிடம் விமர்சனத்தை பெற்றாலும் அதை பற்றி கண்டுகொள்ளாதவர் கமல் ஹாசன். இதற்கிடையே நடிகை ஸ்ரீவித்யாவையும் காதலித்தார் கமல். ஆனால் அவர்களின் காதல் திருமணம் வரை செல்லவில்லை.
ட்ரெண்டான பேட்டி: சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அந்தப் பேட்டியில் கமல் ஹாசன் ஸ்ரீவித்யா குறித்தும், ஸ்ரீவித்யா கமல் ஹாசன் குறித்தும் பேசியிருந்தார்கள். குறிப்பாக இரண்டுபேருமே தாங்கள் ஒருவரையொருவர் காதலித்தது உண்மைதான் என்பதை ஒத்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு சில நாட்கள் கமல் - ஸ்ரீவித்யா காதல் பற்றித்தான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருந்தது.
சந்தான பாரதி பேட்டி: இந்நிலையில் கமல் ஹாசனின் நண்பரும், இயக்குநருமான சந்தான பாரதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் - ஸ்ரீவித்யா காதல் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கமல் - ஸ்ரீவித்யாவின் காதல் உண்மையானது. ஸ்ரீவித்யாவுக்கு கமல் ஹாசன் உதவியாகத்தான் இருந்தார். அவர்களால் ஏனோ வாழ்க்கையில் ஒத்துபோக முடியவில்லை. அதற்கென சில காரணங்களும் இருந்தன.
வாழ்க்கை சரியாக இல்லை: ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை கடைசிவரை சரியாக போகவில்லை. இதனால் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதனால்தான் தனது கடைசி நாட்களில்கூட கமல் ஹாசனை மட்டுமே பார்க்க விரும்பினார். அதனையடுத்து கமலும் ஸ்ரீவித்யாவை போய் பார்த்தார். இருவரும் காதலிப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் தங்கள் காதல் நிறைவேறாது என்பதை தெரிந்து கமல் ஹாசன் ரொம்பவே சிரமப்பட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











