9 வயதில் மகள்.. இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகரான பாலா இரண்டாவது திருமணம் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் சகோதரர் பாலா. இவர் அன்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

பிக் பி படம்..
தொடர்ந்து மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பாலா. கலபம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமான பாலா, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் பாலா.

மலையாள மக்கள் மத்தியில் பிரபலம்
இதில் தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் மலையாள மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் நடிகர் பாலா.

மோகன் லாலுக்கு வில்லன்
இதேபோல் புலிமுருகன் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலுக்கு வில்லனாக நடித்திருந்தார் பாலா. தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் பாலா. மலையாள சினிமா மட்டுமின்றி மலையாள தொலைக் காட்சி சேனல்களின் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார் பாலா.

கருத்து வேறுபாடு - பிரிவு
பாலா கடந்த 2010ஆம் ஆண்டு ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2012ஆம் ஆண்டு அவந்திகா என்ற மகள் பிறந்தார். இதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகள் பாலாவும் அம்ருதாவும் பிரிந்து வாழ்ந்தனர்.

பாலா இரண்டாவது திருமணம்
பின்னர் 2019ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இநிநிலையில் நடிகர் பாலா எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
தனது திருமண போட்டோக்களை பாலா தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 9 வயதில் மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார் பாலா.

பாலாவின் வாழ்க்கை - விஸ்வாசம் படம்
பாலாவின் திருமண வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே சிவா, விஸ்வாசம் படத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. பாலா அஜித்தின் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும் பாலா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











