இயக்குநர் சொன்ன கதை.. துப்பிவிட்டாரா சிம்பு?.. அய்யய்யோ இப்படி வேற நடந்திருக்கா?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. அந்தப் படம் இந்த வருடம் ரிலீஸாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநர் சுசீந்திரன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு ஏகப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன. முக்கியமாக திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அதேசமயம் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற சர்ச்சைகளும் அவரை சுற்றின. மேலும் சில காதல் தோல்விகளும் நடந்தன. சூழல் இப்படி இருக்க திடீரென அவர் ஆன்மீக வழியில் சென்றார். சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். இதன் காரணமாக சிம்புவின் கரியர் அவ்வளவுதான் என்று பலர் பேசினார்கள்.

Simbu Suseenthiran

மாநாடு என்ட்ரி: சூழல் இப்படி இருக்க தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் மாநாடும், வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சிம்புவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக சிம்பு பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து கொண்டாடினார்கள்.

தக் லைஃப் சிம்பு: வரிசையாக மூன்று படங்களில் நடித்த சிம்பு இப்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் கமல், சிம்பு, அபிராமி, திரிஷா என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடித்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தக் லைஃப் திரைப்படம் இந்த வருடம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: தக் லைஃப் படம் தவிர்த்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்தான் வெளியானது. மேலும் ராம்குமார் கோபாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கங்களிலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன பேசினார்?: அவர் அளித்த ஒரு பேட்டியில், "ஜெய்க்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அந்த சமயத்தில்தான் சிம்பு என்னை அழைத்து நீங்கள் கொஞ்ச நாட்களிலேயே படத்தை எடுத்து முடிக்கிறீர்கள். என்னை வைத்து அப்படி ஒரு படம் எடுங்கள். மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்குள் அந்தப் படத்தை எடுத்து முடியுங்கள் என்று கூறினார். அப்போதுதான் ஜெய்க்காக எழுதி வைத்திருந்த ஈஸ்வரன் கதையை சொன்னேன். அதை முதலில் கேட்டதும் சிம்பு துப்பிவிட்டார். பிறகு சிம்புவுக்கு ஏற்ற மாதிரி அந்தக் கதையை மாற்றி எழுதி அந்தப் படத்தை எடுத்து முடித்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X